அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வலி கிழக்கில் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் 2021 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி கிழக்கு நிரவாகப் பொறுப்பாளர் இராமநாதன் ஐங்கரனால் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் குறித்த பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புகளுக்கும் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.மதியழகன் சுபாசினி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குறித்த பிரதேசத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. கிருஷ்னாளினி , தலைமையக சமுர்த்தி முகாமையாளர் செல்வி. நகுலராணி மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து வழங்கி வைத்திருதமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விரைவில் வவுனியா மாவட்டத்தில் பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் - ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட ...
ஆக்கிரமிப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உறுத...
கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றாமல் கனவுகளை சுந்த மக்களுக்காக எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்றவேண்...
|
|