சுரேஸ் பிரேமச்சந்திரனின் தாயரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தாயார் அமரர் கந்தையா நாகம்மாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்.
நேற்றையதினம் தனது 98 ஆவது வயதில் காலமான அமரர் கந்தையா நாகம்மாவின் பூதவுடல் கோப்பாய் தெற்கு கட்டப்பிராயிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்லிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் அன்னாரது இல்லத்திற்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் வலிகாமம் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேசத்தின் பிரதேச சபை உறுப்பினருமான இராமநாதன் ஐங்கரன் மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் ஆகியோர் பூதவுடலுக்கு மலர்வளையம் சார்த்தி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டனர்.
காலம்சென்ற அமரர் கந்தையா நாகம்மா ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வடக்கு மாகாணசபை அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோரது அன்னையார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|