அமரர் கதிரவேலு மார்க்கண்டுவின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Friday, September 22nd, 2017

காலஞ்சென்ற அமரர் கதிரவேலு மார்க்கண்டுவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ட மாவட்ட முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முன்பதாக அங்களப்பாய், இணுவிலில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி  இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தினார்

இந்நிகழ்வுகளில் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன், கட்சியின் மானிப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் ஜீவா, கட்சியின் சுன்னாகம் பிரதேச நிர்வாக செயலாளர் வலண்டயன்,  கட்சியின் வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்ததுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிலுருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

காலஞ்சென்ற அமரர் கதிரவேலு மார்க்கண்டு சுன்னாகம் பிரதேச வட்டாரக் குழு உறுப்பினரான இராசகுமாரியின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஆனந்த சுதாகரனின் விடுதலை என்பது ஒரு அரசியல் அல்ல, மனிதாபிமான நிலைப்பாடு - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட...
ஈ.பி.டி.பியின் வெற்றிக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதாக யாழ் மாவட்ட ஜனநாயக சுகாதார சேவைகள் சங்கம் ...
அமரர் கந்தசாமி பூவம்மாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

அமரர் கனகரத்தினத்தின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  இறுதி அஞ்சலி!
பனைவளத்தை மூலதனமாக்கி வாழ்வியலை வெற்றிகொள்வோம் –ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!
நட்சத்திர வீரர்களாக வலம்வர வைப்பது விளையாட்டுத்துறையே - பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர...