செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000  அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Thursday, May 20th, 2010

கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே!

இடையீடு) நீங்கள் தாராளமாக உங்களது கருத்துக்களைச் சொல்லலாம்.நீங்கள் கதைக்கும்பொழுது உங்கள் கருத்துக்களை அமைதியாக இருந்து நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இருந்தாலும் தாராளமாகக் கேளுங்கள். அதற்கு பதில் சொல்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.(இடையீடு)

இதிலே பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை.(இடையீடு) எவ்வளவோ கண்டு வந்தவன் நான். ஆனபடியால் இதற்கெல்லாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. இந்த நாட்டில் அழிவுகளை மட்டும் தந்து கொண்டிருந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை சாதாரண குடிமக்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாகும். குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் அதற்கு அதிக விலை கொடுத்திருந்தாலும் அழிவுகளுக்குப் பின்னராவது நிமிர்ந்தெழுவோமென்ற நம்பிக்கையோடும் மகிழ்ச்சி யோடும் காத்திருக்கின்றார்கள். ஆனாலும் அழிவு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை குறித்துத் துயரப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமே. கடந்த காலங்களில் அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் துணைபோன அவர்கள் அவற்றிளை மட்டுமே மக்களுக்கு எடுத்துக்காட்டித் தொடர்ந்தும் தமது வழமையான அரசியலை நடத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இப்பொழுது அரசாங்கத்தில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி உரித்துப் பதிவு நடவடிக்கையானது தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட செயலெனப் பொய்யுரைத்து அதை வைத்து தமது சுயலாப அரசியலை நடத்த ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அதைத் தெரிந்துகொண்டால் நல்லது.(இடையீடு) கடந்த 2007ம் ஆண்டிலிருந்து தேசிய மட்டத்தில் – நாடு தழுவிரீதியாக – முன்னெடுக் கப்பட்டுவரும் இத்திட்டமானது 1998ம் ஆண்டின் 21ம் இலக்க உரித்துப் பதிவுச் சட்டத்தினூடாக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்ற ஒரு நடவடிக்கiயாகும். என்பதை நான் இந்தச்; சபையிலே எடுத்துக்கூற விரும்புகின்றேன்.(இடையீடு) இந்தச் சபையிலே இருக்கின்ற உங்களில் சட்டதரணிகளும் இருக்கிறீர்கள். நீங்கள் கொலை செய்தவர்களுக்கும் களவெடுத்தவர்களுக்குமான நியாயம் பேசுவீர்கள். மறுபுறத்தில் நியாய வாதிகளுக்குமாக நான் நியாயம் பேசுகின்றேன். அதுதான் எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசம்.

இலங்கைத் தீவெங்கும் தனியார் காணிகளுக்கான உறுதி அரச காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் அனுமதிப்; பத்திரம் ஆகியவற்றை மிகவும் நம்பகத்தன்மையுடையதும் அரச உத்தரவாத முடையதுமான உரித்து ஆவணமாக மாற்றுவது மேலும் அதனை வினைத்திறன்மிக்க எளிமையான பத்திரமாக உருவாக்குவது. இதனூடாக நடைமுறையில் இருந்துவரும் காணிப் பிணக்குளை தீர்த்து வைப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட சாதாரண குடிமக்கள் தத்தமது காணிகளின் உரித்தை வலுப்படுத்துவது சிறந்த காணி முகா மைத்துவத்துக்காக கணினிமயப்படுத்தபட்ட காணித் தகவல்முறை ஒன்றை உருவாக்கவது இவைகளே இப்பொழுது நடைபெற்றுவரும் காணி உரித்துப் பதிவு நடவடிக்கைகளின் உண்மையான நோக்கங் களாகும்.  காணி உரித்துப் பதிவு நடைமுறை என்பது ஏற்கனவே தென்னிலங்கையில் 2002ம் ஆண்டு முன்னோடி நடவடிக்கையாக கம்பளை,பலாங்கொடை,தம்புத்தேகம,திவுலப்பிட்டிய,ஹோமாகம ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தேசிய அளவில் 2007ம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் தென்னிலங்கையில் 72 பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.(இடையீடு) பாக்கியசோதி அல்ல. இந்தக் காலகட்டத்தில் வடக்கு, கிழக்கில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இப்பொழுது தான் வடக்கு – கிழக்கு பகுதிகளில் அரசியல் ரீதியான முறைகேடுகள் காரணமாகவும் கடந்தகால யுத்த சூழ்நிலை காரணமாகவும் அழிந்துபோயுள்ள காணி தொடர்பிலான ஆவணங்களை மீள வழங்கும் நடவடிக்கை 2011-04 சுற்றுநிரூபத்தின் பிரகாரம் தற்பொழுது  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இங்கு பல கேள்விக்ள எழுப்பப்பட்டன. ஆனால் அரசாங்க அமைச்சரவையினுடைய அங்கீகாரம் பெறப்பட்டு அதிவிஷேட வர்த்தமானிப் பத்திரிகை மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதில் வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்கள் அடங்குகின்றன. அந்த மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு பிரதேச  சபையிலும் முன்னோடி நடவடிக்கையாக அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்துக்குச் சென்று கள்வர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் சார்பாக அவர்கள் கொலை செய்யவில்லை. களவெடுக்கவில்லை என்று வாதிடுகின்றவர்களான உங்களுக்கு இதிலே நிச்சயம் மாற்று அபிப்பிரயாயம் இருக்கும். எனவே அதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். அந்த வகையில் நீங்கள் உச்ச நீதிமன்றத்தின் மூலம் அதன் தீர்ப்பைப் பெற்றுக் கொள்ளலாமென்று நான் நினைக்கின்றேன்.

ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையிலும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசியல் உரிமைகளுக்காக உழைத்து வருகின்ற வர்கள் என்ற வகையிலும் இதுகுறித்த உண்மை நிலையைத் தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். இந்தக் காணி உரித்துப் பதிவுச் சட்டத்தினால் தமிழ் பேசும் மக்கள் எந்தவிதமான பாதிப்புக்களையும் அடையப்போவதில்லை என்பதையும் இதனால் எமது மக்களுக்கு நன்மையே ஏற்படும் என்பதையும் நாம் ஆராய்ந்து அறிந்துள்ளதால் இச்சட்டத்தை ஆதரித்தோம். என்பதையும் இந்தச் சபையில் கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். ஆனால் இந்தக் காணி உரித்துப் பதிவு நடவடிக்கை குறித்துப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அச்சமூட்டப்பட்டுள்ளனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களி;ன பெயரில் இருக்கும் காணிகள் பறிமுதல் செய்யப்படவிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் திட்டமிட்ட வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏனென்றால் அங்கிருந்துதான் அவர்களுடைய செலவுகளுக்குப் பணம் வருகின்றது,

(இடையீடு)

எனக்கு அரசாங்கத்திடம் இருந்து வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற மூத்த தலைவர்கள் சிலர் கடந்த காலங்களில் தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்தி தனியார் மற்றும் அரச காணிகளைப் பலாத்காரமாகவும் கபடத்தனமாகவும் அபகரித்து கூட்டு அம்பலப்பட்டுவிடும். என்று அஞ்சியும் தங்களது சுயலாப அரசியலுக்காகவும் இப்படியான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதுடன் சுயஇலாபத்துக்காக எதிர்ப்பு நடவடிக்ககைளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.(இடையீடு)

அப்படியில்லை (இடையீடு) அவர் என்னுடைய வகுப்புத் தோழன். அவர் அவுஸ்திரேலியாவில் இருக்கின்றார்.(இடையீடு) அது இப்பொழுது எனக்குச் சொந்தம். காசு கொடுத்த வாங்கியிருக்கிறேன்.(இடையீடு) உங்களை மாதிரி நானும் இங்கு கதைக்கலாம். கள்ளக் கையெழுத்தைப்பற்றி எல்லாம் ஆனால் நான் இங்கு கதைக்க விரும்பவில்லை.(இடையீடு) ஆகவே புலம்பெயர்ந்து வாழும் எம் தமிழ் பேசும் உறவுகளுக்கு இந்த விடயத்தை நான் இந்தச் சபையினூடாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அதாவது அவர்கள் இந்தக் காணி எழுத்தப் பதவிக்காக இங்கு வரவேண்டிய அவசியம் இல்லை.என்பதையும் அவர்கள் வாழும் நாடுகளில் இருநதுகொண்டே உறவினர் அல்லது நண்பர்கள் அல்லது கணினி மூலமாக அவர்களது காணிகள் தொடர்பான தகவல்களை வழங்கி பதிவுகளைச் செய்ய முடியும். என்பதையும் இதற்கு மேலதிகமாக எந்தவோர் ஆவணமும் தேவையில்லை என்பதையும் அதற்காக எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை என்பதையும் நான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.(இடையீடு) இந்த முறை அங்கு உங்களை அவர்கள் நம்பவில்லை. இதனால் அதிகமாகக்; யுத்ததின்போது இறந்தவர்களின் காணிகளோ அல்லது இயற்கை மரணம் எய்தியவர்களின் காணிகளோ நடைமுறையில் இருந்து வரும் காணி உரிமைச் சட்டத்தின் பிரகாரம் இறந்தவர்களின் சந்ததியினருக்கே சொந்தமாகும். என்ற விடயத்தை நான் இந்தச் சபையில் தெரிவித்துக் கொளள விரும்புகின்றேன். தூங்குகின்றவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்கின்றவர்கள் மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று சொல்வார்கள்.

கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, இதேவேளை கடந்தகால அழிவு யுத்தத்தின் பின்னர் நாடாளவிய ரீதியில் நடந்துவரும் காணி உரித்துப் பதிவு நடைமுறையாவது தமிழ் மக்களுக்கு விரோதமான ஒரு செயல் அல்ல என்பதற்கும் அது தமிழ் மக்களுக்கு மேலும் பயனுள்ளதாக அமையும். என்பதற்கும் நாம் எடுத்திருக்கும் நிலைப்பாடே சிறந்த சாட்சியமாகும். இது தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கையாக இருந்திருந்தால் நான் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கமாட்டேன.(இடையீடு) உரிய தரப்போடு உரியமுறையில் நான் எனது மக்களுக்காக நீதி கேட்டு வாதாடியிருப்பேன். என்பதை நான் இந்தச் சபையில் உறுதியுடன்  எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள், இந்தச் சட்டமூலமானது 1998ம் ஆண்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பொழுது இன்று இதனைச் சயலாப அரசியல் காணங்களுக்காக எதிர்த்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்;பினைச் சார்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவராதன சட்டமேதை அமரர் கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள்கூட இச்சட்டத்தை சரிவரப் புரிந்துகொண்டதன் காரணமாக அதனை அன்று எதிர்க்கவில்லை. அத்துடன் இதுவொரு நல்ல விடயம் என்றும் இதனை எதிர்ப்பது எமக்குப் பாதிப்பாக அமைந்துவிடும் என்றும் அவர் என்னிடம் கூறியதை நான் இந்தச் சபையில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். உங்களுக்கு இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு இருப்பதற்கு கஸ்டமாகத்தான் இருக்கும்.(இடையீடு) அரசாங்கம் சரியானதைச் செய்யும்பொழுது அதனை ஆதரிப்பதும் தவறான நடவடிக்ககைளில் ஈடுபட்டால் அதனைச் சுட்டிக்காட்டி அதற்குரிய தீர்வு காணும் உண்மையான நோக்கத்தோடு செயல்படுவதுமே நாம் முன்னெடுத்து வருகின்ற இணக்க அரசியல் வழிமுறையாகும். உரிமைக்கு குரல் கொடுப்பதும் உறவுக்கு கரம் கொடுப்பதுமே எமது இணக்க அரசியல் கோட்பாட்டின் அடிப்படைக் கொள்கையாகும். ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திவருவது வெறுமனே சுயரலாப அரசியலுக்கான எதிர்ப்ப மட்டும்தான். அரசாங்கம் சரியானதைச் செய்தாலும் அதனை எதிர்பார்கள். தவறானத்தைச் செய்தாலும் எதிர்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தவறானவற்றை எதிர்ப்பதுகூட அரசாங்கம் அதனைத் திருத்திக்கொண்டு சரியான வழிமுறை நோக்கி  வரவேண்டுமென்பதற்காகவல்ல. தவறுகள் தொடர வே;ணடமென நினைப்பதும் அவற்றினை வைத்தே தமது நாடாளுமன்ற நாற்காலிகளை தக்கவைத்துக்nhகள்ளலாம் என்பதுவுமே தமிழ்த் தெசியக் கூட்டமைப்பினரின் உண்மையான நோக்கங்களாகும். இல்லாத  பிரச்சினைகளை தாமே உருவாக்கி அவற்றினை தமது தேர்தல் வெற்றிக்களுக்காகப் பயன்புடுத்துவதே இவர்கள் செய்துவரும் மக்கள் விரோத நடவடிக்கையாகும். காணி உரித்தப் பதிவு தொடர்பில் இவர்கள் பகிரங்கமாகவே எதிர்ப்புத் தெரிவித்து வந்தாலம்கூட இவர்களும் இவர்களது குடும்ப உறுப்பினர்களும் வேகமாகக் காணி உரித்துப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு தூண்டிவருகிறார்கள். என்பதையும் நான் இந்தச் சபையில் அம்பலப்படுத்த விரும்பகின்றேன்.(இடையீடு) அதன் பிரதியை நான் அடுத்த பாராளமன்ற அமர்வின்போது கொண்டுவந்து உங்களுக்குக் காட்டுகின்றேன்.

(இடையீடு)

அத்துடன் காணி உரித்தப் பதவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஒருவர் ஒத்திவைப்புப் பிரேணையொன்றை இச்சபையில் கொண்டவந்த பொழுது அதாவது அன்று மாண்புமிகு அ.விநாயகமூர்த்தி அவர்கள் அந்தபப் பிரேரணையை இச்சபையில் கொண்டுவந்தபொழுது அதற்கு எதிர்ப்பத் தெரிவித்த அக்கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள்   – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சக பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சபையில் இருந்தவிட்டு வெளியேறினார்கள். அதில் ஒருவர் தற்பொழுது அவருக்குப் பக்கத்தில் இருக்கின்ற பிரபல சட்டத்தரணி கௌரவ உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் அந்தப் பிரேரணையை  இச்சபையில் கொண்டுவந்தபொழுது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சக பாராளுமன்ற உறப்பினர்கள் இருவர் சபையில் இருந்துவிட்டு வெளியேறினார்கள். அதில் ஒருவர் தற்போது அவருக்குப் பக்கத்தில் இருக்கின்ற பிரபல சட்டத்தரணி கௌரவ உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மற்றவர் ஒரு பத்திரினை நிறுவனத்தை நடத்திவருகின்ற முன்னாள் சப்ரா நிறுவனத்தின் உரிமையாளர் கௌரவ சரவணபவன் அவர்கள் (இடையீடு) அவர்கள் இருவரும் வெளிநடப்பு செய்ததை நான் இந்த சபைக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.(இடையீடு) நீங்கள் இருவரும் இங்கிருந்துவிட்டு வெளியே சென்றீர்கள். மாண்புமிகு விநாயகமூர்த்தி அவர்கள் அந்தப் பிரேரணையைக் கொண்டு வருகின்றனர். என்பது உங்களுக்குத் தெரியும். அவ்வாறிருந்தும் நீங்கள் வெளியேறியதிலிருந்து அது பிழை என்பது  உங்களுக்கத் தெரிந்திருக்கின்றது.(இடையீடு) அதுமட்டுமல்ல இக்காணி உரித்தப் பதிவு தொடர்பில் தமிழ் மக்களுக்குப் பாதிப்பு ஏதும் கிடையாதென மாகாணக்காணி ஆணையாளரைச் சந்தித்துத்தான் தகவல் அறிந்து கொண்டதாக முன்னாள் சப்ரா நிறவனத் தலைவரும் பத்திரிகை நிறுவன உரிமையாளருமான பாராளுமன்ற உறுப்பினர் உங்களுக்கு வக்காலத்து வாங்குகின்ற உதயன் பத்திரிகையில் அறிக்கையொன்றையம் விடுத்திருக்கின்றார்.(இடையீடு) அதுவவும் இதிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது.(இடையீடு)

தங்களது சுயலாப அரசியலுக்காக இவர்கள் எவ்வாறு மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்களென்பதற்கு நல்லூர் முத்திரைச் சந்தியில் யாழ்.மாநாகர சபையால் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் சங்கிலியன் சிலையை உடைத்தகற்றி அவ்விடத்தில் புத்த பெருமானின் சிலையை நிறுவப் போவதாகக் கடந்த உள்@ராட்சித் சபைத் தேர்தல் பிராச்சாரத்தின் Nhபது இவர்கள் வாந்தியைப் பரப்பினார்கள். இப்போது அதே இடத்தில் சங்கிலியன் சிலை புதுப்பொலிவுடன் நிமிர்ந்து நிற்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் போலி அரசியலுக்கு சிறந்த சாட்சியமாகும். சங்கிலியன் சிலையைக் கடந்தசெல்லும்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தலை குனிந்துகொண்டு  செல்கின்றார்களென்று பரவலாகப் பேசப்படுகின்றது. சம்பந்தன் ஐயா அவர்கள் அந்தப் பக்கம் வராததால் சிலவேளை அவருக்கு அந்தச் சிலையின் தோற்றம் தெரியாமல் இருக்கலாம். அதனால் முதலில் இருந்த சிலையின் தோற்றத்தையம் புதுப்பிக்கப்பட்ட சிலையின் தோற்றத்தையம் இதோ என்னிடம் இருக்கும் படங்கள் மூலம் அவருக்கு இப்போது நான் னாட்ட விரும்புகின்றேன்.(இடையீடு) நேரம் போய்க்கொண்டிருக்கின்றது. உனது உரையை முடித்துவிட்டு உங்களு;ககு பதில் தருகின்றேன்.(இடையீடு) இல்லை. இல்லை. இப்படித்தான் நீங்கள் பொய் சொல்வது அதாவது உன்னைப்போல் பிறரையும் நேசி. என்பதற்கிணங்க நீங்கள் உய்களைப்போல் பிறரையும் கருதுகின்றீர்கள்.போலிருக்கிறது.(இடையீடு)அப்படியல்ல. அதைக்கழற்ற முடியாது. தேவையாயின் நீங்கள் போய் இழுத்துப் பாருங்கள்.(இடையீடு) அதேபோன்று  யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பழைய பூங்கா தொடர்பாக பல்வேறு பொய்யான பிரசாரங்களை இவர்க்ள முன்னெடுத்திருந்தார்கள். ஆனால் இப்பூங்கா மேலும் பயனள்ள தாகவும் பழைமையைப் பேணவும் அழகுபடுத்தபட்டு வெகுவிரையில் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படவுள்ளது. என்பதை இந்தச் சந்தர்ப்த்தில் கூற விரும்புகின்றேன்.

யாழ்ப்பாணக் கோட்டையை புலிகள் இடித்தபொழுது நீங்கள் அலவாங்கு, பிககான் ஆகியவற்றைத் தூக்கி கொடுத்து உதவிசெய்திருக்கிறீர்கள். கூடையும் சுமந்திருக்கிறீர்கள் அதனை நியாயப்படுத்தியிருக்கிறீர்கள். இது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.நாட்டின் புராதன சின்னங்களுக்குள் யாழ்ப்பாணக் கோட்டையும் உன்று எமது அரசாங்கம் அதனைப் புனரமைத்துக் கொண்டிருக்கிறது எனடபது வேறு விடயம். ஆனால் நீங்கள் புலிகளுடைய அந்த செயலக்காக வக்காலத்து வாங்கினீர்கள். அங்கே புலிகளின் சித்திரவதை முகாம் இருந்தது. இன்று நீங்கள் அதனைப் பாராட்டிப் பேசினீர்கள். விநாயகமூர்த்தி முரளிதரன் முன்பு ருnகைழசஅ உடன் இருந்தகாலத்தில் நஙக்ள அவருக்கு என்ன மாதிரியாகச் சலாம் போட்டுப் பேசினீர்கள் என்பதும் இப்போது அவர் ருnகைழசஅ கழற்றியவுடன் அவருடன் என்ன மாதிரி நடக்கிறீர்க்ள என்பதும் எங்களுக்குத் தெரியும்.(இடையீடு)

தமிழ் மக்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்கம் அதனைப் பலப்டுத்தவதற்கும் தமிழ் கட்சிகளிடையே ஐக்கியம் இருக்க வேண்டியது அவசியமானது, ஆனால் அது ஒரு தேர்தல் வெற்றியாக அல்ல. தமிழ் மகக்ள அடைய வேண்டிய அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காகவே தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாக்க ஐக்கியப்பட்டிருக்கவில்லை. இவ்வாறு இருந்திருந்தால் அண்மையில் புதுடில்லிக்குச் சென்று ஒன்றாகக் கூடிப்பேசிய இவர்களால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயம் குறித்து ஒருமித்த நிலைப்பாட்டுக்கு ஏன் வரமுடியவில்லை என்று நான் இச்சபையிலே கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.(இடையீடு) ஏனெ;னறால் அங்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது எனக்குத் தெரியுந்தானே. நீங்கள் எதற்காக டெல்லிக்குப் போகிறீர்கள். அங்க என்ன செய்கிறீர்கள். என்பது எங்களுக்குத் தெரியுந்தானே. இது யாவும் எனக்குத் தெரிந்த விடயம். அதாவது ஒற்றமையின் பலத்தை உலகுக்கு காட்டுங்கள் என்று கூறித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காலாகாலமாகத் தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் அபகரித்து வருகின்றார்கள். இவர்கள் ஐக்கியத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் அபகரித்த வருகின்றார்கள்.இவர்கள் ஐக்கியத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் அழிவுகளுக்கத் துணைபோனார்களேயன்றி மக்களை அழிவுகளிலிருந்து பாதுகாக்கத் தவறிவிட்டார்கள்.வன்னிப் பிரதேசத்தில் யுத்தம் ஆரம்பிக்கப்டுவதற்கு முன்னர் நான்கூட தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடுவோம். வாருங்கள் எனப் பல தடவைகள் கேட்டிருந்தேன். அண்ணன் மாவை சேனாதிராஜா அவர்களிடமும் நான் ஜனரிதிபதி அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவோம். வாருங்கள் எனப் பல தடவைகள் கேட்டிருந்தேன். ஆனால் அவரால் அது முடியவில்லை.(இடையீடு) அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்மைப்பினர் எனது கருத்துக்களைக் கேட்டுச் செயற்பட்டிருந்தால் தமிழ் மக்கள் இவ்வளவு அழிவுகளைச் சந்தித்திருக்க வேண்டிய துயர நிலை ஏற்பட்டிருக்காது. வடக்கு கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடைபெறுவதாக தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் கூறி வருகிறார்கள். கடந்த காலங்களில் இவை நடத்தப்பட்டன என்பது உண்மைதான். ஆனல் தமிழ் மக்களின் கடிப்பரம்பலில் மாற்றங்களைக் கொண்டுவரும் எற்தவெரு குடியேற்ற நடவடிக்கையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.(இடையீடு)

இப்பொழுது நாங்கள் அரசாங்கத்திலே அங்கம் வகிக்கின்றோம்.அரசாங்கத்தினுடைய கருத்தக்களை வெளிப்படுத்துகின்றோம். அதே நேரத்திலே எங்களுக்கு இணக்கமான கருத்தக்கள் இருந்நதால் நாங்கள் அவற்றினை ஆதரிப்போம். தவறுக்ள நடக்கமாக இருந்தால் அவற்றி னைச் சுட்டிக்காட்டுவோம். எங்களுடைய அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் அது அவ்வாறான குடியேற்றங்களுக்கு இடமளிக்காது. அப்படி நடப்பதை நீங்கள் உறுதிப்படுத்தினால் நான் அந்தக் குடி யேற்றத்தைத நிச்சயமாகத் தடுப்பேன்.

நீங்கள் கதைக்கும்போது நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்பொழுது நான் கதைப்பதைக் கேளுங்கள். நான் முதலில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலகட்டத்திலே இந்த விடயத்தில் எந்நதக் கொள்கைளைப் பின்பறினேனோ அதைத்தான் இப்பொழுதும் சொல்கின்றேன். நாடு தழுவிய ரீதியிலே தனிப்பட்ட முறையிலே யாரும் எங்கேயும் போய்க் குடியேறலாம். ஆனால் அந்தப் பகுதியினுடைய குடிப்பரம்பலைச் சிதைக்கக்கூடிய வகையிலான தட்டமிட்ட அரச குடியேற்றங்கள் இடம்பெற முடியாது. எங்களுடைய அரசாங்கத்தினுடைய கொள்கையும் இதுதான். இந்தக் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.(இடையீடு) அப்படி ஏதாவது நடந்தால் நீங்கள் தயாயளமாக வெளிப்படுத்துங்கள். அதை நான் சீர்செய்வதற்குத் தயாராக இருக்கின்றேன்.

(இடையீடு)

அவ்வாறு இப்பொழுதும் நடைபெற்று அவை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்டுமாயின் நாம் நிச்சமாக அவற்றை எதிர்த்தே தீருவோம்.எமது மக்க்ளின் நிலம் தொடர்பான விடயத்தில் நான் எமது ஆயுதப் போராட்ட காலத்தில் கொண்டிருந்த கொள்கைNhயடுதான் இன்னமும் இருக்கின்றேன். எமது விருப்பங்களைப்போன்று தற்போதைய அர சாங்கமும் இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதாகவே நான் உறதியாக நம்புகின்றேன்.

இந்த நாட்டில் வாழ்கின்ற எவரும் தங்களது சுயவிருப்பத்தின் பேரில் எங்கும் வாழலாம். ஆனால் தமிழ் மகக்ளின் குடிப் பரம்பலை மாற்றக்கூடிய வகையில் அரசாங்கம் திட்;டமிட்ட குடியேற்றங்களை ஏற்படுத்தாது என்பதை நான் இங்கு உறுதிபடத் தெரிவித்தக் கொள்கின்றேன். எல்லா மக்களும் இந்த நாட்டின் பிரஜைகளே என்பது எமது அரசாஙக்கத்தின் கொள்கையாக இருந்து வருகின்றது. இதனை நான் வரவேற்கின்றேன். ஆனாலும் தமிழ் மக்களுக்கு அரசியலுரிமைப் பிரச்சினை உண்டு. இதுகுறித்த நாம் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசி, அரசியல் தீர்வு நோக்கி கைகலுக்கி நடந்து வருகின்றோம். எமது இலட்சியம் வெல்லப்பட்டு வருகின்றது. எமக்கென்று ஒரு கொள்கை உண்டு. தமிழ் மகக்ளின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடைமுறைச்சாத்தயமான வழிமுறை எம்மிடம் உண்டு.

கோட்டை கொத்தனங்கள் கொலை இச்சறத்தல்கள் மனித வெடிகுண்டுகள் என எத்தனையோ தடைகள் மலைபோல எழுந்து எம்மை எதிர்த்து நின்றபோதும் எமது தமிழ் மக்களின் அரசியலுரிமைச் சுதந்ததிரத்துக்குத் தீர்வு காணம் எமது வழிமுறையை மாற்றிக் கொண்ட வரலாறு ஒருபோதும் எமக்கில்லை. சரியான வழிமுறையத் தேர்ந் தெடுத்த எமது உறுப்பினர்களில் பல்வேறு பேர் கொல்லப்பட்டார்கள்.அச்சுறுத்தப் பட்டார்கள். துரத்தப்பதட்டார்கள். நாங்கள் எமது மக்க்ளின் எதிரிகளால் தூற்றப்பட்டோம். வசை பாடப்பட்டோம். எமது இரத்தமும் தசையும் கலந்த உடல் உழைப்பக்கும் சிந்திய வியர்வைக்கும் அர்ப்பணிப்பகளுக்கும் இப்பொது வெற்றி கிடைத்து வருகின்றது.

நாம் கொண்ட வழிமுறையே தமிழ் பேசம் மக்;ளின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு தரும் வழியென்று சகல தரப்பினருமே இன்று ஏற்றக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். எமது வருப்பங்களுக்கு கொள்கையளவில் இணக்கம் கண்டதாலேயே எமது கோரிக்கைகளை அரசாங்கம் ஆற்றச் செயற்படுத்தி வருகின்றது. அரசியல் தீர்வு முயற்சி முதற்கொண்டு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், உயர்பாதுகாப்பு வலயங்களைப் படிப்படியாக நீக்கவது, அவசரகாலச்சட்டத்தை நீக்கியமை, சரணடைந்தவர்களைப் புனரமைப்பிற்கூடாக விடுவித்தல் எனப் பல்வேறு செய்லகளையும் எமது விருப்பப்படி அரசாங்கம் ஆற்றிவருகின்றது. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் கருத்துக்கள் விசித்திரமானவை. அரசாங்கதின்மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்கிறார்கள். அனாலும் அரசாங்கத்துடன் பேசி வருகின்றார்கள். அவ்வாறு பேசிவிட்டு அரசாங்கம் எதையும் செய்யப்போவதில்லை என்றும் கூறி வருகின்றனர். அவர்கள் அரசாங்கத்தோடு பேசி வருவதை நான் வரவேற்கின்றேன். ஆனால் கடந்த காலங்களைப் போலன்னறி இனிமேலாவது உண்மையாகவே தமிழ் மக்க்ளி;ன பிரச்சினைக்கத் தீர்வு காணவேண்டும் என்ற நோக்கத்தடன் அவர்கள் பேச்சவார்த்தையில் கலந்த கொள்ளவேண்டும் என நான் விரும்புகின்றேன். இதேவேளை எமது கோரிக்கைகளாலும் அரசாங்கத்தின் கொள்கைகளாலும் தமிழ் மகக்;ளின் பல்வேறு பிரச்சிகைள் தீர்க்கப்பட்டு வருகின்றன என இன்னொரு புறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறிவருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வீடுகளுக்குள் குறட்டைவிட்டுத் தூங்குகின்றார்கள். விடிந்ததும் தங்களது விட்டின் கூரையின் மீது ஏறிநின்று தாம் கூவியதால்தான் பொழுதே விடிந்தது என்ற கற்பனை செய்கின்றார்கள்.அறிக்கையும் விடுகின்றார்கள்.

தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான மதம் சார்ந்த பகுதிகள் அழிக்கப்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருவது குறித்து எனது கவனத்தினை நான் செலுத்த விரும்புகின்றேன். யுத்தத்தினால் பாதிக்கபட்ட எமது மக்களின் மத ஸ்தாபனங்களைப் புனரமைப்பதற்கு அரசாங்கம் அதிகளவு நிதியை வழங்கி வருகின்றது. இப்டிபாதும் கூட மாண்புமிகு பிகரதம மந்திரி அவர்களின் தலைமையில் பல ஆலயங்களுக்கு நிதி ஒதுக்கீட்லிருந்தும் அதிகளவு நிதியை வழங்குமாறு நான் அரசாங்கத்திடம் கோரியிருக்கின்றேன். எமது மத வழிபாட்டுத் தலங்கள் பற்றிய விடயங்களில் விருபத்தகாத சம்பவங்கள் நடக்கும் பட்சத்தில் அவை குறித்து நாம் அரசாங்கத்துடன் பேசித் தீர்வு காணமுடியும். ஏனெனில் எமது மக்களின் மத வழிபாட்டுச் சுதந்திரத்துக்கு எவரும் தடை விதிப்பதை எமது அரசாங்கம்  ஏற்றக் கொள்ளப்போவதில்லை.

பண்டா-  செல்வாஒ ப்பந்தம், டட்லி – செல்வாஒ ப்பந்தம் ஆகிய பல்வேறு ஒப்பந்தங்களும் இங்கு நடைமுறைப்படுதப்பட்டிருந்தால் இன்றைய பிரச்சினைகள் தோன்றியிருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறிவருகின்றார்கள். இதனை நான் ஒப்புக் கொள்கின்றேன்.உண்மைதான். அன்று தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த அரசாங்கங்களே தமிழ் மகக்;களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுக்குத் தடையாக இருந்து வந்திருக்கின்றன என்பதை நான் ஏற்றக்கொள்கின்றேன். ஆனாலும் இதுபற்றித் திரும்ப திரும்பக் கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதற்குப் பிந்திய எமது வரலாற்று நிகழ்வுகளை எண்ணிப் பார்த்து மனம் திருந்த வேண்டும்.

இலங்கை இந்திய ஒப்ப்நதம் உருவாக்கப்பட்டமை எமக்கு அரியொதரு வாய்ப்பாகும். அதை உடைத்து சிதைந்த தமிழ்த் தலைமைகள் தந்திருக்கிறார்கள். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்களுடனான பேச்சவாத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான பேச்சுவார்த்தை இறுதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான பேச்சவார்ததை எனத் தொடர்ந்து வந்த சந்தர்ப்பங்கள் அனைத்தiயும் தமிழத் தலைமைகள் சரியாகப் பயன்படத்த தவறியிருந்தன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான அரசு கொண்டுவந்திருந்த தீர்வுத் திட்டத்தை எதிர்கட்சிகளோடு இணைந்து ஆர்ப்பட்டம் நடத்தியிருந்த வரலாற்றத் துரோகங்கள் வரலாறு ஒருபோதும் மறந்துவிடப்போவதில்லை. ஆகவே இனிவருங்காலங்களிலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க வேண்டும். சரியான திசைவழியில் திருந்தி நடக்க வேண்டும்.தமிழ் மக்களின் அன்றாட அவலங்களைசத் தீர்ப்பதற்கு உழைக்காமலும் அபிவிருத்திக்காக நடக்காமலும் இதுவரை தமிழ் மக்களை சுடுகாட்டிலும் சாம்பல் மேட்டிலும் இறுதியாக முள்ளிவாய்க்காலுக்குள்ளும் தள்ளிவிட்டு வசதியான வாழ்க்கையைத் தேடி வெளிநாடுகளுக்கு ஓடிப்போன தமது வரலாறுகளைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் திருத்திக்கொள்ள வேண்டும்.

கௌரவ குழுக்களின் பிரதி தவிசாளர் அவர்களே,

நான் இந்தச் சபையிலே ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின் றேன். தமிழ்;க் கூட்டமைப்பினரின் பிரச்சினை என்பது வேறு. தமிழ் மக்களின் பிரச்சினை என்பது வேறு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது தேர்தல் வெற்றிக்காகவும் சுகபோக பதவி நாற்காலிகளுக்காவும் உணர்ச்சி பொங்க பொய் பேசுகிறார்கள். பின்னர் பின்கதவு தட்டி அரசாங்கத்தோடு பேசித் தமது சொந்தச் சலுகைகளை மட்டும் பெற்றுக் கொள்கிறார்கள். இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சினை. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினை அதுவல்ல. தமிழ் மக்கள் இலங்கைத்திவில் பூர்வீகக் குடிமக்;கள். இந்த நாட்டின் பிரஜைகள். ஆகவே அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் சமவுரிமை பெற்று சுதந்திரப் பிரஜைகளாக இந்த நாட்டில் வாழ விரும்புகிறார்கள். நாம் தமிழர்களாக இருப்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தையோ அன்றி இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தையோ ஒருபோதும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.யாரையும் யாரும் அடிமைப்படுத்தாத யாருடைய நிலங்களையும் யாரும் அபகரிக்காத யாருடைய கலை கலாசார  பண்பாடுகளையும் யாரும் அவமதிக்காத எந்தவொரு இன, சமூக, மதம்சார்ந்த மக்களினதும் மத வழிபாட்டுச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தாத எல்லா மொழிகளும் சமன் என்று ஓங்கி ஒலிக்கும் உயர்ந்த இலட்சியப் பண்புகளோடு எமது இலங்கைத் தீவு துலங்க வேண்டும். இதுவே எங்களுடையதும் தமிழ் மக்களினதும் விருப்பமாகும்.

தமது சுயலாப அரசியலுக்காக வெறுமனே உணர்ச்சி பொங்க பேசி கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் தட்டிக்கழித்து தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினையைத் தீராத பிரச்சினையாக நீடித்துச் செல்ல விரும்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போலன்றி தமிழ் மக்களின் சார்பாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சமாதானப் புறாக்களை பறக்கவிட்டு இருண்ட தேசம் வெளிக்க நாம் ஏந்திய தீப்பந்தத்துக்கு நம்பிக்கை நெய் ஊற்றி சிங்கள மக்களினதும் அரசாங்கத்தினதும் உறவுக்கு கரம் கொடுத்து தமிழ் மக்களினதும் உரிமைக் குரலாகவே நான் இவைகளை இந்தச் சபையில் முன்வைக்கின்றேன். நன்றி.

20 மே 2000

Related posts:

வடக்கில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில...
வரிச் சுமைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
தேசிய அரசு மீது கொண்டிருக்கும் அக்கறை தேசிய பிரச்சினை மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா அவையி...
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் ...