செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000

யாழ்குடாநாட்டில்  இடம்பெறும் அசம்பாவிதங்கள். பாரம்பரிய கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சரின் கூற்று.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இந்த நாட்டில் யுத்தம் நடந்து முடிந்திருக்கின்றது. யுத்தத்தின் வடுக்களிலிருந்தும் அவலங்களிலிந்தும் துயரங்களிலிருந்தும் எமது மக்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றார்கள். அதற்காக நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கும் படைத்தரப்;பினருக்கும்  பல தடவைகள் நன்றி தெரிவித்து வந்திருக்கின்றேன். ஆனாலும் இனி இங்கு யுத்தமில்லை.

இரத்தமில்லையென்ற நம்பிக்கையோடு காத்திருந்த எமது மக்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்படும்படியாக சில சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மழைவிட்டாலும் தூறல் ஓயவில்லையென்பது போல குறிப்பாக யாழ்.குடாநாட்டில் ஆங்காங்கே சில படுகொலைச் சம்பவங்கள் ஆட்கடத்தல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் எமது மக்கள் மறுபடியும் ஓர் அச்சம்தரும் சூழலுக்குள் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். மறுபடியம் எமது வாழ்விடங்கள் இரத்தம் சிந்தும் பூமியாக மாறிவிடப் போகின்றதென்ற வாந்திகளும் ஆங்காங்கே திட்டமிட்டவiகியல் பரப்பப்ட்டு வருகின்றன. அப்பாவிமக்க்ள எதை நம்புவது எதை நம்பாமலிருப்பது என்று திகைத்துக் கொண்டிருக்கிறாhகள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இது எமது மக்கள் சமூகத்தின் ஒரு மனிதாபிமான பிரச்சினை. அதற்காகவே நான் இந்த விடயத்தை இந்தச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றேன். எமக்கு வாக்களித்த மக்கள் என்பதற்காகவே நான் இந்த விடயத்தை இந்தச் சபையின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். எமக்கு வாக்களித்த மக்கள் என்பதற்காகவோ அன்றி எமது அரசாங்கத்திற்கு சர்வதேச அளவில் அபகீர்த்தி உருவாகிவிடும் என்பதற்காகவோ நான் இதைத் தெரிவிக்க வரவில்லை. அது அடுத்த பட்சமான பிரச்சினை. சகல மக்களும் இங்கு அச்சமின்றி ஜனநாயக சூழலில் சம உரிமையோடு முகமுயர்த்தி வாழவேண்டுமென்பதே எமது விருப்பமாகும். இதை பிரதான நோக்கமாகக் கொண்டே இது குறித்த விடயங்களை நான் இந்தச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வரவிரும்புகின்றேன்.

மக்களின் அவலங்களை வைத்து அரசியல் நடத்துவதற்கு நான் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. இதைவைத்து அரசியல் இலாபம் தேடுவதற்குக்கூட சிலர் முயற்சிக்கலாம். ஆனால் நாங்கள் அப்படியானவர்கள் அல்லர் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். கடந்த காலங்களில் உருவாகிவந்த பல நல்ல சூழல்கள் – சந்தர்ப்பங்கள் இங்கு சரியாகப் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை. சரியாகப் பயன்படுத் தப்பட்டிருக்கவில்லை. இன்று மாறிவந்திருக்கும் சூழல் என்பது வரலாற்றில் ஒருபோதும் நடந்திருக்காத மாற்றமாகும்.

கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு நாம் இன்று கிடைத்திருக்கும் இந்தச் சூழலைப் பாதுகாக்க வேண்டும். இதற்கான கூட்டுப் பொறுப்பு சகலருக்கும் உண்டு. யாழ்ப்பாணத்தில் சங்கானையில் நடந்த குருக்கள் வீட்டுக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்த தரப்பினர், நடந்துமுடிந்த அனைத்து சம்பவங்களுக்குமான சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிப்பார்களென நம்புகின்றேன். அவர்கள் யாராக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதுதவிர கடத்திச் செல்லப்பட்டவர்கள் உயிர் மற்றும் உடல் சேதமின்றி வீடு திரும்ப நாம் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

கௌரவ சபாநாகயர் அவர்களே!

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோரென யார் மீதாவது சந்தேகம் உருவாகும் பட்சத்தில் ஆதரங்களோடு அவர்களைக் கைது செய்யவோ அல்லது நீதி விசாரணைக்குட்படுத்தவோ இந்த நாட்டின் பாதுகாப்புத் தரப்பினருக்கும் நீதித்துறையினருக்கும் சட்டரீதியிலான அதிகாரம் உண்டு. இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி நடந்து வருகின்ற வன்முறைச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவும் நடந்துமுடிந்த வற்றுக்கான நீதி விசாரணைகளை மேற்கொள்ளவும் கடத்திச் செல்லப் பட்டவர்கள் வீடு திரும்பவும் நடவடிக்கையெடுக்க வேண்டும்.ஆகவே இந்த மனிதாபிமானப் பிரச்சினையை ஒரு மக்கள் சமூகத்தின் சார்பாகவும் இந்த நாட்டை வன்முறைகளற்ற ஒரு ஜனநாயக பூமியாக உயர்த்தவேண்டுமென்று விரும்பி உழகை;கும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற வகையிலும் சபையின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்.

இதேவேளை மக்கள் மத்தியில் உருவாகி வரும் பதட்டங்களை மேலும் தூண்டும் வகையில் யாரும் கருத்துக்களை அல்லது அறிக்கைகளை வெளியிட்டு எமது மக்களை மேலும் அச்சந்தரும் சூழலுக்குள் தள்ளிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென்றும் ஊடகங்கள் இதுகுறித்த விடயங்களுக்குக் களம் கொடுக்காமல் பொறுப்புணர்ச்சியோடு செயற்பட முன்வர வேண்டுமென்றும் நான் இந்தச் சபையிலே கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். உண்மைகளை மட்டும் வெளியில் கொண்டுவருவதற்கு யாருக்கும் சுதந்திரம் உண்டு. இதேவேளை அச்சத்தில் உறைந்துபோகும் சகல மக்களுக்கும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது நம்பிக்கைகொண்டு உறுதியளிக்கின்றேன். நன்றி.

20 மே 2000

Related posts:

இறக்குமதிக்கான வரிகளை அதிகரிப்பதன் மூலமாக எமது உற்பத்திகளுக்கான உள்ளூர் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கலா...
செய்யும் தவறுக்கு முன்னர் அதன் விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவ...
ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறைக...

சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு  பண வீக்கத்தை எதிர்கொள்ளப் போதாது - நாடாளுமன்றத்தி...
தேசிய அரசு மீது கொண்டிருக்கும் அக்கறை தேசிய பிரச்சினை மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...
அன்று தென்னிலங்கையுடன் தேன்நிலவு - இன்று தீர்வு வழங்காதென்று சுயலாபக் கூச்சல் – நாடாளுமன்றில் அமைச்ச...