செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே!

“எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?” என்ற தமிழ் முதுமொழிக்கேற்ப இலங்கை  – இந்திய ஒப்பந்தத்திற்குப் பிறகு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இன்றைய அவலங்களுக்குத் தமிழரின் பெயரால் யார் காரணமாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தச் சந்தாப்பத்தில் மீண்டும் வெளிப்படுத்துவதும், அழுதாலும் பிள்ளையை அவளே பெறவேண்டும் என்பதுபோல் தமிழ் மக்கள் மனம் கலைந்து சுதந்திரமாகக் கருத்துச்  சொல்ல முன்வருவதன் மூலமாகப் பல்குழலைத் தடுத்துப் பல்குரலில் பேச முன்வருவதும் இந்த நிலைமைகளை நிச்சமாய் மாற்றம் என்ற நம்பிக்கையோடு எனது பேச்சை தொடர்கின்றேன்.

அழகிய எங்கள் தேசம் இன்று பாரிய அழிவுகளை எதிர்கொண்டிருக்கின்றது. ஏற்பட்டிருக்கும் இழப்புக்களைவிடவும் அதிகமாதன இழப்பைநோக்கி செல்வதற்குப் புலித்தலைமை தயாராகிக் கொண்டிருக்கின்றது. எனவே இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அழிவுகளிலிருந்து இனி தேசத்தையும் காப்பாற்றுவதற்கான ஓர் அபாய முன்னறிவிப்பாக நான் இங்கு மனந்திறந்து பேச விரும்புகின்றேன்.

இன்று எமது மக்களின் முகம்களில் மகிழ்ச்சி இல்லை. மனங்களில் நிம்மதி இல்லை. நாளையபொழுது நல்லதாக விடியவேண்டும் என்பதே அவர்களது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதுதான் அவர்களது விருப்பமும் ஆனால் அந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வெறும் கனவாகிப் போய்விடுமோ என்ற ஏக்கத்துடன் மட்டுந்தான் எமது மக்களின் ஒவ்வொரு பொழுதும் விடிந்து கொண்டிருக்கின்றது.

இதற்குக் காரணமாக இருப்பது முடிவற்றுத் தொடரும் அழிவு யுத்தம் மட்டுந்தான் இன்று தமிழ்பேசும் மக்களுக்கான ஆயுதப் போராட்டத்தை நீதியின் பக்கம் நின்று வழிநடத்திச் செல்லவேண்டும் என்ற ஒரு வரலாற்று நிர்ப்பந்தம் இருந்தது. அப்பொழுது நாமும் நீதியின் பக்கம் நின்று ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வழிநடத்திச் சென்றவர்கள். ஆனாலும் அந்த ஆயுதப்போராட்டம் வழிதவறி திசைமாறிச் சென்றது.செல்லவேண்டிய பாதையை விட்டுத் தடம்புரண்டு தவறான பாதைக்குச் சென்றது. எந்த மக்களுக்காகப் போராடுவதாகப் புலித் தலைமையினர் கூறினார்களோ அந்த மக்களையும் அவர்களுக்காகப் போராட்டப் புறப்பட்ட போராளிகளையும் கொன்றுகுவிக்கும் கோடாரிக்காம்புகளாகப் புலித் தலைமை செயற்படத் தொடங்கியது.புலித் தலைமையின் ஏவலால் தமிழ்பேசும் முஸ்லிம் மக்கள் மீது படுகொலைகளைப் புரியத் தொடங்கினார்கள்.

புலிகள் அப்பாவிச் சிங்களச் சகோதர மக்களைத் தெருவெங்கும் கொன்று போட்டார்கள். புலிகள் ஆயுதப் போராட்டம் என்பது எதை அடைய வேண்டும் என்ற ஓர் இலக்கையே கொண்டிருக்கவேண்டும். ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவோ அன்றி ஓர் இலக்கை அடைவதற்காகவோ நடக்கின்ற எந்தப் போராட்டத்தையும் யாரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் சொந்த இனத்தின் குருதியைக் குடிக்கவும் காலகாலமாகத் தங்களுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த முஸ்லிம் சசோகதர மக்கள் மீது வன்முறைகளை ஏவிவிடவும் அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்று குவிக்கவுமே புலித்தலைமையால் ஆயுதப் போராட்டம் பயன்படுத்தப்பட்டது. இழப்புக்களை மட்டுந்தான் அந்த ஆயுதப் போராட்டம் ஏற்படுத்தியது.

இழப்புக்கள் இல்லாமல் போராட்டம் இருக்க முடியாது என்று கூறும் புலித்தலைமை இதுவரை கால இழப்புக்களில் இருந்து எந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இழப்புக்கள் இல்லாமல் போராட்டம் இல்லை என்று கூறும் அந்தப் புலித்தலைமையை நியாயப்படுத்தும் சுயலாபகார பேர்வழிகள் தான். இன்று இங்கு மக்களின் இழப்புக்கள் குறித்துப் பேச வந்திருக்கிறார்கள். கொல் அல்லது கொல்லப்படு என்று மக்கள் விரோத கோட்பாட்டைக் கொண்டிருக்கும் புலித் தலைமையை நியாயப்படுத்தும் சுயலாபகரமான பேர்வழிகள்தான் இங்கு கொலைகளை பற்றிப் பேச வந்திருக்கிறார்கள். “நாற்பதாயிரம் சவப் பெட்டிகளை யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு தயாராக இருங்கள்” என்று பாராளுமன்றில் யுத்தப் பிரகடனம் செய்துவிட்டு அதனால் விளைந்த அழிவுகளைப் பற்றி அவர்களே இங்கு பேச வந்திருக்கின்றார்கள்.விசித்திரமான பேர்வழிகள் இவர்கள். வேடிக்கையான மனிதர்கள் இவர்கள். மக்களின் வேதனைகளுக்குக் காரணமாக இருக்கின்ற இவர்கள், மக்களின் வேதனைகள் குறித்தும் அவர்கள் சந்தித்து வரும் சோதனைகள் குறித்தும் இங்கு பேச வந்திருக்கிறார்கள்.

அழிவுகளிலிருந்து மக்களையும் எமது தேசத்தையும் மீட்டெடுக்க வேண்டும். அமைதிப் பூங்காவில் உரிமை பெற்ற சுதந்திரப் பிரஜைகளாகத் தமிழ் பேசும் மக்கள் வாழ வேண்டும் என்ற ஓர் உன்னத நோக்கில் மட்டுந்தான்  இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னரான ஆயுதப் போராட்டமும் அதற்கு முந்திய அஹிம்சை வழிப் போராட்டங்களும் இலங்கை – இந்தியப் ஒப்பந்தம் ஒன்று ஒரு பொன்னான வாய்ப்பினை உருவாக்கியிருந்தன.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டு இன்று 20 வருடங்கள் கழிந்துவிட்டன. அந்தப் பொன்னான வாய்ப்பினை புலித்தலைமை உடைத்துச் சிதைத்திருந்தது. அதேவேளை இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள்கூட அதைச் சரிவரப் பயன்படுத்தத் தவறிவிட்டனர். அந்த ஒப்பந்தத்தை அவர்கள் துஷ்பிரயோகம் செய்திருந்தனர். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைச் சரியாகப் பயன்படுத்த எண்ணிய ஈ.பி.டி.பி. யினராகிய எமக்கு இந்த ஒப்பந்த நடைமுறையில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பத்தை அன்று அதை ஏற்றுச் செயற்பட்டிருந்த அமைப்பினர் மறுத்திருந்தனர் என்பதையும் இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

ஏக பிரதிநிதித்துவம் என்ற புலித்தலைமையின் தலைமைவெறி ஒரு பக்கம் அதே குணாம்சத்தில் பிற தலைமைகளை அங்கீகரிக்கத் தவறிய தவறான தலைமைகள் இன்னொரு பக்கம் நின்று இலங்கை -இந்திய ஒப்பந்த நடைமுறைகளைக் குழி தோண்டிப் புதைத்திருந்தன.அது ஒரு பொன்னான வாய்ப்பு. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை உடைத்துச் சிதைத்து புலிகள் ஏற்படுத்திய நாசகராகச் செயல்களும் அதைச் சரிவரப் பயன்படுத்தத் தவறிய கட்டுபாடற்ற தலைமைகளின் தவறான செயற்பாடுகளும் இன்று எமது மக்களின் கண்களிலிருந்து இரத்த கண்ணீரை வரவழைத்திருக்கின்றன. கடந்த 20ஆண்டுகளும் இழப்புக்களோடும் இன்னல்களோடும் எமது மக்களின் துயரத்தை தொடர்கிறது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவாகும் வரைக்கும் புலிகள் இயக்கத்திலிருந்து இறந்தவர்களின் தொகை 652 உறுப்பினர்கள் மட்டும்தான். அதைப் புலித்தலைமையே அப்போது பகிரங்கமாக அறிவித்திருந்தது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை உடைத்துச் சிதைத்து நாசமாக்கி அமைதிப் படையோடு அழிவு யுத்தம் தொடங்கிய புலித்தலைமை அதன்பின்னர் இலங்கை அரசபடைகளோடு அழிவு யுத்தத்தை தொடர்ந்திருந்தது. இப்போது புலிகள் இயக்கத்திலிருந்து இறந்தவர்களின் தொகை 19000ஐக் கடந்துவிட்டதாகப் புலித்தலைமை அறிவித்திருக்கின்றது.

அதைவிடவும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட உள்ளியக்கப் படுகொலைகளினால் கொல்லப்பட்ட புலி உறுப்பினர் களின் எண்ணிக்கை எவ்வளவு தமது இயக்கத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீது புலிகளால் கொல்லப்பட்ட உறுப்பினர்களின் தொகை எவ்வளவு? கிழக்கின் வெருகல் ஆற்றுப் படுகொலைகளினால் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் தொகை எவ்வளவு? கொழும்பில் நஞ்சூட்டிக் கொல்லப்பட்ட உறுப்பினர்களின் தொகை என்ன? அவைகள் புலிகளின் 10000 என்ற கணக்கில் சேர்க்கப்படவில்லை.

தமிழர்களின் மாற்று அமைப்புக்களின் உறுப்பினர்கள் அரசியல் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்@ராட்சிச் சபை உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் புத்திஜீவிகள் கல்விமான்கள் புலிகளின் தவறான பாதைக்கு ஒத்துப்போக மறுத்தது  பொதுமக்கள் கப்பம் அல்லது கட்டாய வரி கொடுக்க மறுத்தவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் புலித்தலைமையின்  கூட்டுத் துப்பாகிகளுக்குப் பலியாகிப்போயிருந்தனர். யுத்ததில் அநியாயமாகக் கொல்லப்பட்டாலும் சரி இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் இன்று வரையுள்ள அழிவுகளுக்கான பொறுப்பைப் புலித்தலைமையே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அமைதிப்படையோடு யுத்தம் நடாத்தி அதன் பின்னர் பிரேமதாச அரசுடனும்| கூட்டுக்குலாவி பின்னர் யுத்தம் நடாத்தத் தொடங்கி அதை இன்று வரை தொடர்ந்து எமது மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது புலித் தலைமையே.

இலங்கை –  இந்தய ஒப்பந்தம் உருவாக்கபட்டு 13 வருடங்கள் கழிந்த நிலையில் அதாவது 2000ம் ஆண்டு புலித்தலைமைக்கு  ஆலாசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பகிரங்கமாக மக்களுக்கு என்று கூறி ஆற்றிய உரையில் கருத்துக்களையும்  நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் நல்ல பல சாதகமான அம்சங்கள் இருந்தன என்ற உண்மையை அன்ரன் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். சாத்தான் வேதம் ஓதியது போல இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை உடைத்துச் சிதைத்திருந்த புலிகளின் ஆலோசகரே பின்பு அதை ஆதரித்தும் கூறியிருந்தார்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தேவையில்லை. இன்னொரு புறத்தில் இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்றும் ஆக்கிரமிப்பு என்றும் எமது நேச நாடாகிய இந்தியாவுடன் பகைமையைத் தோற்றுவிப்பதற்கான பிரசாரங்களில் ஈடுபட முனைந்;தவர்கள்தான் இன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் குறித்து அறிக்கையில் மட்டும் அழுது வடிக்கிறார்கள். ஒரு பொறுப்புள்ள அரசியல் கடமையோடு அன்றைய சமகாலத்தை உணர்ந்து எதிர்காலத்தின் விளைவுகளையும் உணர்ந்து அரசியல் யதார்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இது போன்ற இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு எதிரான பிரச்சாரங்களை கருத்துக்களால் மட்டும் நான் தடுத்து நிறுத்தியிருக்கின்றேன் என்ற விடயத்தையும் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டவர்கள் கடந்து போன பஸ்வண்டிக்கு கைகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்த தவறிய தமிழ்த் தலைமைகளால் இன்று எமது மக்கள் யுத்தம் என்ற இருட்டறைகுள் சிறைப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் அதற்குப் பிந்திய ராஜீவ்காந்தியுடனான புலித்தலைமையின் இரகசியப் பேச்சுவார்த்தை பிரமேதாஸ புலிகள் பேச்சுவார்த்தை, சந்திரிகா குமாரதுங்க புலிகள் பேச்சவார்த்தை ரணில் விக்கிரசிங்க புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் என அனைத்துச் சந்தர்ப்பங்களையும் தங்களது சுயலாப வன்முறை அரசியலுக்கு மட்டும்தான் புலித்தலைமை பயன்படுத்திக் கொண்டது. மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது தான் பிரபாகரனுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக சமாதானத்தின் மீதான தனது விருப்பத்தை பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இருப்பினும் சமாதான்ததின் மீதான அவரது விருப்பத்தை எதிர்த்த புலித்தலைமை பொங்கி எழும் மக்கள் படை என்றும் சீறும் படை என்றும் சங்கிலியன் படை என்றும் பல அநாமதேய அமைப்புக்களின் பெயரால்அரச படைகளின் மீது தாக்குதல்களை நடத்த தொடங்கினார். மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட பல ஜனநாயகச் சக்திகள் மீதும் ஒத்துப்போக மறுத்த தமிழ் பொதுமக்கள் மீதும் அதே அநாமதேய அமைப்புக்களின் பெயரால் படுகொலைகளைப் புரிந்தனர்.

2005ம் அண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதிப் பதவிக்கு வந்து இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபொழுது ஆற்றிய உரையில் சமாதானத்துக்கான தனது நல்லெண்ண சமிக்ஞையைக் காட்டி புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தான் நேரடியாகப் பேச விரும்புவதாக  தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அதற்கு அடுத்த வாரம் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் நவம்பர் மாதத்தில் நிகழ்த்திய தனது வருடாந்த உரையில் வழமையான யுத்தப் பிரகடனத்தையே வெளிப்படுத்தியிருந்தார்.

தவிர்க்கமுடியாத வரலாற்றுச் சூழ்நிலைகள் காரணமாக சிங்கள அரசுடன் சமாதானப் பேச்சுக்களில் பங்குபற்றத் தான் நிர்ப்பந்திக்கபட்டாதகத் தனது  உரையில் தெரிவித்திருந்த பிரபாகரன், தனது இலக்கை எட்டுவதற்கான எண்ணங்களுக்குச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே தாம் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு ஈ.பி.டி.பி. யினராகிய நாம், தமிழ் பேசும் மக்களையும் இந்த நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் அழிவுகளிலிருந்து காப்பாற்றுமாறு 06-12-2005ல் சர்வதேச சமூகத்திடம் ஒரு மனிதபிமான கோரிக்கைகயை விடுத்திருந்தோம்.அந்த அறிக்கையின் சில பகுதிகளை இந்தச் சபையில் நான் எடுத்துக் கூற விரும்புகின்றேன்.

வடக்கு கிழக்கில் படையினரைத் தூண்டிவிடும் வகையில் புலிகளால் பரந்த அளவிலான இராணுவ முன்னெடுப்பும் தாக்குதல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை காலப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் முதல் முதலாகப் படையினர் மீது யாழ்.கோண்டாவில் பகுதியில் வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டு ஆறு படையினர் கொல்லப்பட்டு இருவர் படுகாயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் ஒருவர் பின்னர் காலமானார். அதேபோல், முதலன்முதலாக யாழ்.நீர்வேலிப் பகுதியில் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் இதற்கு முன்னெப்போதும் நடந்திராத பாரிய நேரடித் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளினால் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2005 டிசம்பர் மாதம் 6ம் திகதி புலிகளால் இருபாலையில் மேற்கொள்ளப்பட்டட கிளைமோர் தாக்குதலில் ஐந்து இராணவத்தினர் கொல்லப்பட்டனர்.

அதேவேளை காத்ததான்குடிப் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.பளீஸ் அவர்களைப் படுகொலை செய்ததன் மூலம் தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையிலான மோதல்களையும் முரண்பாடுகளையும் புலிகள் தூண்டிவிட்டிருக்கிறார்கள். 2005 நவம்பர் 18ம் திகதி அதிகாலை புலிகள் அக்கரைப்பற்று முஸ்லிம் பள்ளிவாசல் மீது கைத்துண்டுத் தாக்குதலை மேற்கொண்டதால் ஆறு முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் 13பேர் காயமடைந்தனர். நவம்பர் 19ம் திகதி ஏறாவூரில் நான்கு முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.மேலும் 2005 டிசம்பர் 6ந் திகதி புலிகள் கிழக்கு மாகாணத்திலுள்ள மருதமுனைப்பகுதி வாசிகளான இரண்டு முஸ்லிம்களை சுட்டுக் கொன்றார்.

மாணவர்கள் என்ற பெயரில் மாணவர்களின் சீரூடைகளை அணிந்த புலிகளின் சிறுவர் படையினர் இராணவப் படையினரின் சோதனைச் சாவடிகளுக்குக் கல் எறிந்து தாக்குவதால் மாணவர்களின் கல்வி, மற்றும் இயல்பு வாழ்க்கை என்பன இன்னமும் பன்மடங்கு பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது. புலிகள் மக்களின் குடியிருப்புக்களிலிருந்து தாக்குதல் நடத்துவதால் அப்பாவி மக்களே பாதிக்கப்படுகின்றனர்.அப்பாவி மக்களுக்கு அவலங்கள் நிகழவேணடுமென்ற எண்ணத்தில் புலித்தலைமை திட்டமிட்டு நடத்துகின்ற தாக்குதல்களே இவையா கும். புலித்தலைமைகளால் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கை களால் சமாதானத்தை விரும்பும் மக்கள் மிகுந்த அச்சததுக்குள்ளாகி யிருக்கின்றனர்.

இதேவேளை யுத்த எண்ணங்களைத் தூண்டிவிடக்கூடிய வகையிலான பிரசாரங்களையும் புலிகளின் ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன.வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களிடம் இறுதி யுத்தத்திற்கான நிதி சேகரிப்பு எனப் பாரிய அளவில் உளவியல் அச்சுறுத்தல்களை விடுத்து பலாத்காரமாக நிதி சேகரிககும் காரியத்திலும் புலிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேவேளை கோண்டாவில் பகுதியில் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதல் சம்பவத்தை வீடியோ படம் பிடித்து வெளிநாடுகளில் காண்பித்து நிதி திரட்டி வருகின்றனர்.

ஆகவே இது குறித்து சர்வதேச சமூகமும் விரைந்து பணியாற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யுத்தத்தைத் தொடராதிருக்கவும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கவும் ஆவன செய்து அழுத்தங்களை கொடுப்பதற்குச் சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்.தமிழ் பேசும் மக்களின் சமாதானம் குறித்த நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புக்களையும் சர்வதேச சமூகத்தின் கைகளில் நாம் ஒப்படைக்கின்றோம்.சமாதானத்தை உருவாக்கவும் தமிழ் பேசும் மக்களைக் காப்பாற்றவும் விரைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என ஈ.பி.டி.பி. கோரிக்கை விடுக்கின்றது. இவ்வாறு ஈ.பி.டி.பி. யினராகிய நாம் சர்வதேசச் சமூகத்திடம் 06-12-2005 ல் மனிதபிமான ரீதியில் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தோம்.

கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!

அன்று புலிகள் யுத்த முனைப்புக்களில் ஆர்வம் காட்டிப் படையினர் மீதான தாக்குதல்களை ஆரம்பித்திருந்தபோது, புலிகளின் தயவில் இருக்கும் சுய இலாபக்காரப் பேர்வழிகள் வரப்போகும் அழிவுகளைக் கருத்தில் எடுக்காமல் வாய்பொத்தி மௌனிகளாக இருந்தனர்.ஆனால் இன்று அதே சுய இலாபக்காரப் பேர்வழிகள் தமழ்பேசும் மக்களின் அழிவுகள் குறித்துப் பாராளுமன்றில் விவாதம் நடத்தி வந்திருக்கின்றார்கள். புலிகளும் அவர்களது தயவில் உள்ள கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கும் பொறுப்பற்ற சுய இலாபாகார அரசியல் பேர்வழிகளும் இன்று நேற்றைய தவறுகளுக்காக நாளையும் அழுவதுபோல் நடிக்கின்றார்கள்.

அவர்கள் இன்றைய தவறுகளுக்காக நாளை அழுவதுபோல நடிப்பார்கள். ஆனால் நடந்த தவறுகளுக்கு யார் காரணம் என்பதை மட்;டும் அவர்கள் தெரிந்துகொண்டிருந்தும் தெரியாதவர்கள் போல் நடிக்கிறார்கள். அத்துடன் இன்று பயன்படுத்தப்படும் என்பதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை.சமாதானமும் அமைதியும் அரசியலுரிமைச் சதந்திரமு;ம மக்களது கைகளுக்கு எட்டாத தூரத்திற்குத் தள்ளப்பட்டு வருகின்றன. யுத்தம் மட்டும்தான் கிட்டவந்து கோர முகத்;தடன் எமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் தம்வாசல் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறது. இன்று தமது யுத்த வெறியினால் சமாதானத்திற்கான சந்தர்ப்பங்களை உதறித் தள்ளிவிட்ட புலித் தலைமை எமது தாயகப் பூமியான கிழக்கு மண்ணை இழந்து நிற்கின்றது. இருப்பதையும் இழந்து நிற்கும் புலித்தலைமை இப்போது இருப்பதையும் இழப்பதற்கான வழமையான கைங்கரியத்தில் இறங்கி நிற்கிறது.

வன்னிப் பெருநிலப்பரப்பை தமது அதிகாரப் பிடிக்கள் வைத்திருக்கும் புலித் தலைமை அங்குள்ள இளம் சிறார்களைத் தமது படையணிக்குப் பலாத்காரமாகச் சேர்த்து வருகின்றது. இங்கு பெற்றார் முன்னிலையில் பிள்ளைகள் ஆயுதப்பயிற்சிக்காக கதறக் கதறக் கடத்திச் செல்கின்றார்கள். வெள்ளை வான்களில் வீடுகள் தோறும் வந்;திறங்கும் புலிகள் வன்னியில் வாழும் மக்களின் பிள்ளைகளை அவர்களது விருப்பங்களுக்கு மாறாக பிடித்துச் செல்கிறார்கள். இவ்வாறு பிடித்துச் செல்லப்படும் எமது இளவயதினர் கட்டாய ஆயுதப்; பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அநியாயமாகக் குருதி சிந்தும் கள முனைக்கு அனுப்பப்படுகிறார்கள். யுத்த முனைககுச் செல்ல விரும்பாத எம் தமிழ் இளையோரின் முதுகுகளுக்கப் பினன்னால் துப்பாக்கி குழாய்கள் நீட்டப்பட்டு அவர்கள் இராணுவக் காவலரண்களை நோக்கி நிற்கும்படி மிரட்டப்படுகிறார்கள்.புலிகள் குறிப்பிட்ட தமது பிரதேசங்களுக்கு நடமாட வேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பித்த அதற்கென விஷேட அடையாள அட்டையினையும் வழங்கி தங்களது கட்டுப்பாட்டு பிரதேசமான வன்னியில் மக்களை அடக்கி அதிகாரம் செலுத்தி வருகின்றார்கள்.பொதுமக்கள் சுதந்திரமாக தொழில் புரிய முடியாது. சுதந்திரமான எழுத முடியாது. பேச முடியாது. விரும்பியபடி வன்னிக்கு வெளியே செல்ல முடியாது. சிறார்கள் முதற்கொண்டு முதயோர்கள் கர்ப்பிணிப் பெண்கள் வரை அனைவரும் கட்டாய ஆயுதப் பயிற்சியில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து புலிகளின் தயவில் தமிழரின் பெயரில் வாக்கு மோசடியில் ஈடுபட்டு திருட்டுத் தனமாக நாடாளுமன்றம் வந்திருப்பவர்கள் வாயயே திறப்பதில்லை.

நீங்கள் வாயே திறப்பதில்லை. நீங்கள் அங்கே முழு அட்டூழியம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாம் தெரிந்து கொண்டும் முழுக்க முழுக்க அட்டூழியம். யார் இன்றைக்கு இந்தப் பிரச்சினைககு காரணம் என்பது எல்லோருக்கும் முழுக்க முழுக்கத் தெரியும்.

சர்வதேச சமூகம் தனனுடைய 52பக்க அறிக்கையிலே சொல்லியிருக் கின்றது. தேர்தலில் எந்தளவிற்கு கள்ள ஏழுவுநு போடப்பட்டது என்று. நீங்கள் எந்த அளவிற்கு மக்களுடைய எலலாவற்றையும் எந்தளலவிற்குச் சுரண்டினீர்கள் என்பது அந்த மக்களுக்கும் தெரியும். அந்தத் திக்கம் வடிசாலையை எந்தளவுக்கு (இடையீடு)

கடந்த 11-08-2006 அன்று யாழ்.மண்ணை நான்கு நாட்களில் கைப்பற்றப் போவதாக கூறி புலிகள் நடத்திய யாழ்.மீதான தாக்குதல் பெரும் இழப்புக்களோடு தோல்டவியில்; முடிவடைந்திருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இதனால் யாருக்கு இழப்பு யாருக்கு அவலம் இதைப் புலிகளின் தயவில் அரசியல் நடத்தும் பேர்வழிகள் புரிந்து கொண்டும் மக்களின் அவலங்கள் குறித்து நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு நிற்கின்;றார்கள். மக்களின் அவலங்கள் குறித்தும் அழிவுகள் குறித்தும் நீலிக்கண்ணீர் வடிக்கும் பேர்வழிகள் அந்த அவலங்களுக்குப் புலிகள் தான் பிரதான காரணமாக இருக்கின்றார்கள்.

என்ற உண்மையை எடுத்துக்கூற வக்கற்றவர்களாகவும் இவர்களில் சிலர் இந்தச் சபையில் மக்களின் அவலங்கள் குறித்து பேசியிருந்தார்கள். இடிப்பது சிவன் கோவில் படிப்பது தேவாரம் போல் அந்த அவலங்களுக்க காரணமாக இருந்து கொண்டு அதற்காக அழுவது போல நடிக்கின்றார்கள். யார் இவர்கள் மக்களின் சொத்துக்களை மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் சூறையாடிக்கொண்டிருக்கம் ஊழல் பேர்வழிகள் இவர்கள்.மக்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தையும் தொழிலாளர்களின் உழைப்பையும் திருட்டுத் தனமாகச் சுரண்டும் சுரண்டல் பேர்வழிகள் இவர்கள். திருட்டுத்தனமாக திருட்டு வாக்குப்போட்டு மக்களின் வாக்குகளைத் தட்டிப்பறித்து வந்திருப்பவர்கள் இவர்கள். வேறு சிலர் யுத்த நெருக்கடி நிலைமைகளை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கொள்ளை இலாபம் அடிப்பதில் ஈடுபடுகின்றனர்.(இடையீடு) மக்களின் அவலங்கள் குறித்துப் பேசும் தகுதியை இழந்திருப்பவர்கள் இவர்கள் என்ற மக்களே எம்மிடம் வந்த முறையிட்டிருக்கிறார்கள். யுத்த வெறிக்கு தமது சுயலாபத்திற்காகத் தானம் பொடும் தலையாட்டிப் பொம்மைகள் இவர்கள்.

யாழ்.குடாநாட்டைக் கைப்பெற்ற நினைத்துப் புலித்தலைமை மேற்கொண்ட யுத்த முனைப்புக்களால் முகமாலையிலும் அல்லைப் பிட்டியிலும் எமது தமிழ் இளவயதினரை பலிகொடுத்துவிட்ட திரும்பி ஓடியதுதான் கண்ட மிச்சம். இப்போதும் மறுபடியும் புலித்தலைமை யாழ் மீது படையெடுக்க திட்டமிட்டு வருகிறது. அதற்காக 60,000தமிழ் இளவயதினரைக் கட்டாயத்தின் பேரில் பிடித்துச் சென்று அவர்களுக்குப் பயிற்சியையும் அளித்து வருகிறது. புலித்தiலைமை யாழ்.மண்ணைத் தங்களது சர்வதிகாரப் பிடிக்குள் கொண்டுவர நினைக்கும் புலித்தலைமை யாழ் மண்ணில் தங்களது சட்டவிரோத சர்வதிகார ஆட்சியை நிலைநிறுத்துவதற்குத் திட்டமிட்டு வருகின்றது.

இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் போது யாழ்.மண்ணிலிருந்து மேலும் 50,000 இளவயதினரை சேர்க்கும் திட்டத்தை புலித்தலைமை தீட்டி வருகிறது .மண்மீட்பு என்ற சய இலாபக் கற்பனைத் தேரில் பவனிவரும் புலித்தலைமை தாம் மீட்டெடுக்கப்போவதாக கூறும் மண்ணுக்காக அப்பாவி மக்களைப் பலிகொடுக்கத் தயாராகி வருகின்றது. யாழ் மண்ணைக் கைப்பெற்ற நினைக்கும் புலித்தலைமை இளவயதினரையும்அப்பாவி மக்களின் உயிர்களையும் பலி கொடுக்கத் தயாராகி வருகிறது. ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற வகையில் சாண் ஏற முழம் சறுக்கும். என்ற நிலையில் நிலங்களை கைப்பற்றுவதும் பின் அதைக் கைவிட்டு ஓடுமுவதுமான புலித்தலைமையின் வரலாறு தொடர்ந்தபடி இருக்கிறது. இந்த நிலையானது தமிழ்பேசும் மக்களின் சமாதான சகவாழ்வு என்ற இலக்கை நோக்கிய பயணத்தை பின்னோக்கி இழுத்து வருகிறது. மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தமிழ் பேசும் மக்களின் அரசியல் இலக்கை அடைவதற்காக பாதையில் தடைகளை உருவாக்கி வருகிறது.

இன்றைய காலச் சூழலில் யுத்ததால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கண்டுவிட முடியாது. யுத்தம் அழிவுகளை மட்டும்தான் உருவாக்கும். யுத்தம் இளவயதினரரைப் பலாத்கராமாக தங்களது மக்களைச் சயலாப அரசியலுக்கு வழிவகுப்பதோடு அப்பாவி மக்களைச் சுயலாப அரசியலுக்குப் பலி கொடுப்பதற்கும் பயன்படும்.பட்டுவேட்டி உறங்கிய கனவில் இருந்தால் கட்டியுள்ள கோவணமும் களவாடப்பட்டு விடும் என்ற முதுமொழியைப்போல் யுத்ததின் மூலம் எதனையும் சாதித்து விடலாம் என்ற புலித் தலைமையின் அழிவு நோக்கிய திட்டங்கள் இருக்கின்ற நிலைமைகளையும் மோசமான ஒரு நிலைக்கே இட்டுச் செல்லும் (இடையீடு) உங்கள் பிள்ளைகள் நீங்கள் வெளிநாட்டிலும் வேறு இடங்களிலம் வைத்துக்கொண்டு பிறகு ஏன் நீங்கள் மற்றவர்களைப் பற்றிக் கதைக்கின்றீர்கள் புலித்தலைமை அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றது.(இடையீடு) அவையெல்லாம் எங்களுக்குத் தெரியும் அங்கே என்னநடக்கின்றது.என்பது உங்களுக்கு தெரியும்.

வெறுமனே பம்மாத்துக் கதை  கதைத்துக் கொண்டிருக்கின்றீர்களே! இன்றைய காலச்சூழலில் யுத்தத்தில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கண்டுவிட முடியாது.(இடையீடு) உங்களுக்கு கதைப்பதற்கே தகுதி இல்லை. ஏனென்றால் நீங்கள் கள்ள வாக்கு போட்டு;த்தான் இங்கே வந்தீர்கள். இங்கே ஒரு சிலர் இருக்கிறார்கள் போராட்டதத்தோடு சம்பந்தப்பட்டவர்கள். தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள். அவர்களுக்கு நான் மதிப்புக் கொடுக்கின்றேன்.உங்களைப் போல கள்ள ஏழுவுநு போட்டு வந்தவர்களுக்கு நான் மதிப்பு கொடுக்கப்போவதில்லை மக்களும் உங்களைத் திரும்பி பார்க்கப் போவதில்லை.

மக்களுக்குத் தெரியும் சர்வதேச சமூகத்திற்குத் தெரியும் யார் கள்ள ஏழுவுநு போட்டு வந்தவர்கள் என்பது எமது மக்களுக்கும் இந்த நாட்டில் வாழும் ஏனைய ஆனு முகு;குறுளு;குகமு; ஆழுPவுகுளு; ஏற்பட்டுவிடக்கூடாது என்ற விருப்பதில்தான் நான் இதைக் தெரிவிக்க விரும்புகின்றேன். புலித்தலைமையின் யுத்தவெறி ஒருபோதும் நிரந்தர வெற்றியை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்போவதில்லை. அப்பாவி மனித உயிர்களை யுத்தத்திற்கு தின்னக் கொடுத்த அவர்கள் முன்னெடுக்கப்போகும் நாசகார நடவடிக்கை என்பது இன்னும் இலட்சக்கணக்கான மக்களை நடுத்தெருவிற்குக் கொண்டுவந்து நிறுத்தப் போகின்றது. மனிதப் பிணங்களை தெருவோரங்கள் எங்கும் வீசியெறியப் போகின்றது. மண்ணைக் கைப்பற்றுவதும் அதன் பின்னர் கைப்பற்றிய மண்ணை கைவிட்டு தப்பி ஓடுவதுமாக புலித்தலைமையின் இதுவரை கால நாசகார வரலாறுகள் தொடர்ந்தும் இருந்து வந்திருக்கின்றன. புலித்தலைமை மண்ணைக் கைப்பற்றும் போதும் மக்களுக்கு மட்டும்தான் இழப்பு வருகின்றது.

அதன் பின்னர் மண்ணைக் கைவிட்டு ஓடும்போதும் மக்களுக்கு மட்டுந்தான் இழப்பு வருகின்றது .பல்குழல் பீராங்;கிகள் மோதிக் கொள்வதால் ஏற்படப்போகும் அழிவுகளை பல்குரல்களாலும் தடுத்த நிறுத்த முடியும். யுத்ததிற்கு எதிராக தமிழ் பேசும் மக்கள மட்டுமல்ல அனைத்து இன மக்களும் சமாதான விரும்பிகளும் தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டிய தருணம் இது. புலிகளின் யுத்த வெறி மீது தாம் கொண்டிருக்கும் வெறுப்பை மௌனத்தில் புதைத்து வைத்துக்கொண்டு தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்கள் இருப்பார்களாயானால் வரப்போகும் அழிவுகளை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும். எனவே,யுத்தத்தை தடுத்து நிறுத்தவும் யுத்தம் தரப்போகும் அழிவுகளிலிருந்து மக்களையும் இந்த நாட்டையும் காப்பாற்றிக் கொள்ளவும் அனைத்துச் சமாதான விரும்பிகளும் முன்வர வேண்டும்.

இது தமிழ் பேசும் மக்களின் பெயரால் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக நடத்தப்படுகின்ற யுத்தம்  என்று கூறி தங்களது பிள்ளைகளைப் பதுக்கி பாதுகாத்து வைத்துக் கொண்டு அடுத்தவர்களின் பிள்ளைகளை மட்டும் பலிக்களத்திற்கு தின்னக்கொடுக்கும் புலி யுத்தம் இது. ஆகவே யுத்தம் வேண்டாம் என்று வெளிப்படையாக வாய்திறந்து பேசுவதற்கு தமிழ் பேசும் மக்களுக்கு  உரிமை உண்டு. இந்த அழிவு யுத்தத்தை யாரும் அங்கீகரிக்க முடியாது. இது நீதியான யுத்தமல்ல அநீதியான யுத்தம் இந்த யுத்தத்தின் மூலம் புலித்தலைமையால் எதையும் சாதித்துவிடமுடியாது. தமிழ் பேசும் மக்களுக்கு அரசியலுரிமைச் சுதந்திரம் வேண்டும்.

அமைதி வேண்டும் சமாதானம் வேண்டும். ஆனால் இவைகளை இந்த யதத்தின் மூலம் அடைய முடியாது என்ற உண்மையை அனைவுரும் வெளிப்படையாக தெரிவிக்க முன்வர வேண்டும். புலித்தலைமை முன்னெடுக்கம் நாகசாரச் செயல்களில் இருற்து தொடர்ந்தும் தமழ்பேசும் மக்கள்  விலகியிருக்க வேண்டும். புலித்தலைமையின் வன்முறை நடவடிக்ககைளை தொடர்ந்தம் ஆதரிக்காமல் இருக்க வேண்டும். இரத்தம் சிந்தாமல் யத்தம் நடத்தாமல் எமது பிரச்சினைகளைத் தீர்த்தக் கொள்வதற்கான திட்டங்கள் இருக்கின்றன. அதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.அதற்கான நடைமுறைகள் இருக்கின்றன. யாராலும்  வெல்லப்பட முடியாத நம்பிக்கையும் துணிச்சலும் எங்களிடம் இருக்கின்றன.நடைமுறைச் சாத்தியமான வழிமுiறியரல் நின்று எமது மக்களின் அரசியலரிமைசப் பிரச்சினைக்கான தீர்வை எட்டிவிட வேண்டும்.

இன்று அரசியலுரிமை  பிரச்சினக்கான தீர்வு முயற்சிகள் யாவும் சுய இலாப அரசியல் சாக்கடைச் சகதிக்கள் போயிருக்கின்றன. அந்தச் சகதிக்கள் இருந்து அரசியல் தீர்வு நோக்கிய பாதையில் வண்டியை இழுத்தச் செல்ல வேண்டும். அதை எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்த ஈ.பி.டி.பி. யினராகிய நாம் சர்வகட்சி மாநாட்டிலும் அனைத்து கட்சித் தலைவர்களின் சந்திப்பங்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களிடமும் எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவிடமும் சர்வதேச நாடுகளிலும் தெளிவாக எடுத்தக் கூறியிருக்கின்றோம்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான மாகாண சபைகள் இன்னமும் தென்னிலங்கையில் அரசியல் தலைமைகளினால் வழிநடத்திச் செல்;லப்பட்டு வருகின்றன.நடைமுறையில் இருந்த வடக்கு – கிழக்கில் மட்டும் அதற்கான அரசியல் தலைமை கொடுக்கப்டாமல் அது செழிழந்து போயிருக்கின்றது.பொறுப்பற்ற தமிழ் அரசியல் தலைமைகளாலும் தமிழ் பேசம் மக்களின் பெயரால் வன்முறைநடத்தும் யுத்த வெறியர்களாலும் வடக்கு – கிழக்கு மாகாணசபை செயலிழந்து விட்டிருக்கிறது. மாகாணசபைத் திட்டம் என்பது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மகக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால் அந்த வாய்ப்பினைத் தமிழ் பேசும் மக்கள் மட்டும் அனுபவிக்க முடியாமல் இருக்கின்றார்கள். ஆகவே வடக்கு – கிழக்கு மாகாண சபைகட்கான ஓர் அரசியல் தலைமைத்துவத்தை முதலில் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.அதன்மூலம் சக்திகள் பதைந்திலுருக்கும் அரசியல் தீர்வு முயற்சிகளை அடுத்த கட்டத்தை நோக்கி முன்னோக்கி நகர்த்த முடியும். மக்களின் அன்றாட அவலங்களுக்கு முதலில் தீர்வுகாண முடியும்.

எனக்குத் தேவைப்படும் நேரத்தை நான் எடுத்துக் கொள்ளலாம் என்பதை அரசத் தரப்பின் சார்பாக நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இரண்டாவது கட்டமாக இன்று நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பின் பிரகாரம் கூடிய அதிகாரங்கள் மாகாணசபைகளுக்குக் கொடுத்த மாகாணசபை அதிகாரத்தைப் பலப்படுத்துவது அதாவது இணைப்புப் பட்டியலை மாகாண சபையுடன் சேர்த்து விடுவது இந்த இருகட்ட நடவடிக்ககைளும் இலங்கையில் இருக்கும் அனைத்துக் கட்சிகளாலும் பெரும்பாலும் ஏற்றக்கொள்ளபட முடிந்த ஒன்றாகும்.அதற்கான இணக்கங்களைப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தெரிவித்திருப்பது குறித்து நான் தமிழ் பேசும் மக்களின் சார்பில் அவற்றிற்;கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்த இருகட்ட நகர்வுகளும் அனைத்து இன மக்களுக்கும் சமாதானம் குறித்த ஒரு நம்பிக்கையான சூழலை தோற்றவிப்பதற்கான அடிப்படையாக அமையும்.

இறுதிக்கட்டத்தில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாட்டின் மூலம் இறுதித் தீர்வினை இலகுவாக எட்டிவிட முடியம். இதன்மூலம் முஸ்லிம், சிங்கள மக்கள் அiடிவரும் சம உரிமைகளோடு சம பிரஜைகளாக சமாதான சகவாழ்வு வாழும் காலத்தை உருவாக்குவதற் கான முன்னெடுப்பக்களைத் தொடர முடியம். இதயச்சத்தியோடு வன்முறை அரசியiலைக் கைவிடும் பட்சத்தில் சர்வகட்சிகளும் கலந்;து கொள்ளம் இறுதித் தீர்வுக்கான மூன்றாவதுகட்ட முயற்சியின் போது புலிகளும் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இதுதான் ஈ.பி.டி.பி. கொண்டிருக்கும் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறை. சமாதானத்தையும் சகவாழ்வையும் இன ஐக்கியத்தையம் விரும்பும் அனைத்தக் தரப்பிடமிருந்து இதை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரத்தையும் ஆதரவiயும் நாம் எதிர்பாhக்கின்றோம். மக்களின் அவலங்கள் குறித்த அக்கறை கொள்ளாமல் அக்கறை கொள்வது போல் நடித்துக்கொண்டு மக்களிடம் வந்து மோசடித் தேர்தல் நடத்தி வாக்குக்கொடுத்து வந்தவர்கள் மக்களுக்காக எதையும் சாதிக்கப்போவதில்லை. தமிழ் பேசும் மக்களை வாழவைக்கவும் அவர்களுக்க வழிகாட்டவும் இவர்களிடம் எந்தத் திட்டமும் இல்லையென்பதை நான் இந்தச் சபையினூடாக தமிழ் பேசும் மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

மக்களின் அவலங்களும் அழிவுகளுக்கும் தாமும் காரணமாதக இருந்துவிட்டு இதற்குக் காரணமான புலிகளையும் தோளில் தூக்கிவைத்தக் கூத்தாடிக் கொண்டு மக்களின் அவலம் குறித்துப் பேசவிழையும் போலி அரசியல் தலைமைகள் குறித்து தமிழ் பேசம் மக்களும் சமாதான விரும்பிகளும் விழிப்படையத் தொடங்கி விட்டார்கள். எமது மக்களை வாழவைப்பதற்கும் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் ஈ.பி.டி.பி. யினராகிய நாங்கள் கடினமாக உழைத்து வருகின்றோம். மக்கள் வெளிப்படையாக முன்வந்து அழிவு யத்தத்திற்கு  எதிரான தங்களது கருத்துக்களைச் சகல வழிகளிலும் வெளிப்படுத்த வேண்டும். சர்வதேச நாடுகளுக்கும் தங்களது சமாதானத்தின் மீதான விருப்பையும் யுத்ததின் மீதான வெறுப்பiயும் வெளிப்படுத்த முன்வர வேண்டும். அரசியல் உரிமைக்கும் அமைதிக்கும் சமாதானத்திற்கும் தடையான பிரதான காரணமாகவிருப்பது புலித் தலைமையின் யுத்த வெறிதான் என்பதை வெளிப்படுத்தும் பொது அரசியல் உரிமைச் சுதந்ததிரத்தை நோக்கிய எங்களது பயணத்தின் தடைகள் அகற்றபட்டு விடும். பின்னரும் தடைகள் இருக்குமாயின் வன்முறைகளற்ற வழிமுறைகளோடு உரிமைகட்குக் குரல்கொடுத்து உறவுக்குக் கரம்கொடுத்து, சுலபமாக அந்தத் தடைகளை நீக்கிவிடலாம். அழகிய எங்கள் தாயக தேசத்தில் மரணங்களிலில்லாத ஓர் அமைதிப் பூங்காவில் மக்கள் முகம்மலர்ந்து சிரிக்க அனைத்த இன மக்களும் சமமான உரிமைப் பெற்றுச் சதந்திரப் பிரஜைகளாக தலைநிமிர்ந்து வாழும் பொற்காலத்தை உருவாக்கலாம். எனவே அழிவு யுத்தத்தை தடுத்து நிறுத்துவோம். இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைப் பாதுகாப்போம். அரசியல் உரிமைச் சுதந்திரத்தை நோக்கி நடைமுறைச் சாத்தியமான வழியில் முன்னேறுவோம்.அதற்காக இன்றே எழுந்திருங்கள். நாளை இதைவிடவும் தடைகள் அதிகமாகாலாம்.மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி. தேசத்துக்காக தியாகங்களை ஏற்போம். நன்றி.

20 மே 2000

Related posts: