ISIS பயங்கரவாதிகளால் தஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 33 பேர் பலி!
Tuesday, May 21st, 2019
தஜிகிஸ்தான் நாட்டின் வாக்தாத் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் சிறையிடப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத கைதிகளுக்கும் சிறைச்சாலையில் உள்ள ஏனைய கைதிகளுக்கும் இடையே திடீரென ஏற்பட்ட தகராறு பின்னர் கலவரமாக மாறியுள்ளதாக அந்நாட்டு செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்ட போதிலும், கைதிகளை சமரசம் செய்ய முடியாமையினை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 சிறை கைதிகள் மற்றும் 03 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சிறையில் கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருவதாகவும், மேலும் கலவரம் பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
ரஷ்யாவுக்கு எதிராக போர் குற்றப் புலனாய்வை கோரும் ஜோண் கெர்ரி
விமான விபத்தில் கணவரை காப்பற்றியமைக்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்த பிரேசில் வீரரின் மனைவி!
மகாராஷ்டிரா கோவிட் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து - 13 பேர் உயிரிழப்பு
|
|
|


