6500 ரூபாவுக்கு உணவு உட்கொண்டு 80 ஆயிரம் ரூபா டிப்ஸ் வழங்கிய நபர் – பிரித்தானியாவில் நடந்த சுவாரஸ்யம்!
Monday, January 16th, 2017
6500 ரூபாவுக்கு சாப்பிட்ட ஒருவர் 80 ஆயிரம் ரூபாய் (இந்திய ரூபாய்) டிப்ஸ் வழங்கிய சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பிரித்தானியாவின், அயர்லாந்தில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான உணவகம் ஒன்று உள்ளது. குறித்த உணவகத்திற்கு 2002ஆம் ஆண்டு முதல் தொழில் அதிபர் ஒருவர் வந்து சாப்பிட்டு போவது வழக்கம்.
குறித்த உணவகத்தில் பாபு என்ற சமயல் கலைஞர் சமைக்கும் உணவுகளை சுவைத்து சாப்பிடும் அவர், சாப்பிட்டு முடித்த பின்னர் பாபுவை அழைத்து பாராட்டி விட்டு செல்வது வழங்கம். இந்நிலையில், அண்மையில், குறித்த நபர் தனது குடும்பத்தாருடன் அந்த உணவகத்திற்கு சென்று சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்டதற்கான தொகை 6500 ரூபாய் (79.5 பவுண்ட்) செலுத்தினார்.
அதன் பின்னர் வழமைப்போல் பாபுவை அழைத்து பாராட்டிய அவர், யாரும் எதிர்பாராத விதமாக 80 ஆயிரம் ரூபாய் டிப்ஸ் (1000 பவுண்ஸ்) வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த தொழில் அதிபர், சுவையான உணவுகளை வழங்கிய பாபுவுக்கு நன்றி. இது வெறும் சிறியத் தொகையே என கூறியுள்ளார்.
Related posts:
|
|
|


