61 நாட்கள் மீன்பிடித் தடை – தடையினை மீறி கடற்றொழிலில் ஈடுபடுவோரை கண்காணிக்க விசேட நடவடிக்கை!

மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில், அந்த தடையினை மீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவோரை கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தடை விதிக்கப்பட்டுள்ள கடற்பகுதிகளில் கண்காணித்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜுன் மாதம் 14ஆம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்காரணமாக, குறித்த காலப்பகுதியில், 15 ஆயிரம் விசைப்படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினகளின் இனப்பெருக்கக் காலமாக, இந்திய மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகின்றது.
இந்தத் தடைக்காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 14 தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி நங்கூரமிடப்பட்டிருக்கும்.
இந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளை பராமரித்தல், வலை பின்னுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|