60 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 60 இலட்சத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 3 இலட்சத்து 66 ஆயிரமாக பதிவாகியுள்ளது.
இதில் 1 இலட்சத்து 45 ஆயிரம் பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 17 இலட்சத்து 93 ஆயித்தைக் கடந்துள்ளது.
பிரேசில் நாட்டில் 4 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு அங்கு 28 ஆயிரம் பேர் குறித்த வைரஸ் தாக்கத்தின் காரணமாக பலியாகியுள்ளனர்.
குறித்த பட்டியலில் 9வது இடத்தில் இந்தியா உள்ளதோடு, அங்கு ஒரு இலட்சத்து 73 பேர் கொரோனா தொற்றுறுதியானவர்கள் என்பதோடு அங்கு 4980 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காற்று மாசுபடுவதால் சீனா, இந்தியா, கம்போடியாவில் பெரும் பாதிப்பு!
தாய்லாந்து மன்னர் மீதான தாக்குதல் தொடர்பில் மாணவர்கள் இருவர் கைது!
பப்புவா நியூகினியின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே!
|
|