6 பேரை சுட்டுக்கொன்ற இளைஞன் – ஜேர்மனில் சம்பவம்!

தனது பெற்றோர்கள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை சுட்டுக்கொன்ற 26 வயதுடைய இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்படி சம்பவம் ஜேர்மன் நாட்டின் ரொட்-எம்சீ நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உணவகம் ஒன்றில் உள்ள ஏனைய சிலரையும் இவர் சுட்டுக்கொன்றதாக முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக வெளிவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், ஆனால் குடும்பத் தகராறு ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
Related posts:
பாடசாலை மாணவருக்கு ரூ.153 கோடி இழப்பீடு! நீதிமன்று உத்தரவு!
125 கோடி மக்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்..!!
பேரழிவுகளால் 2 மில்லியன் மக்கள் உயிரிழப்பு : 3.64 டிரில்லியன் டொலர்கள் இழப்பு - உலக வானிலை அமைப்பு ச...
|
|