544 பொதுமக்கள் படு கொலை – சிரியாவில் சம்பவம்!
Monday, July 8th, 2019
ரஷ்ய தலைமையில் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையின்போது 544 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையிலேயே இந்த இழப்பு ஏற்பட்டதாக நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியினில் 2 ஆயிரத்து 117 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவில் ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இறுதி வடமேற்கு சிரிய பிரதேசங்களை மீட்கும் நடவடிக்கைகளின் போதே இந்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
சிரிய மனித உரிமை வலைப்பின்னல் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமக்களின் உயிரிழப்புகள் பெரும்பாலும் ரஷ்ய யுத்த வாநூர்திகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சின்போதே இடம்பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரணமானவர்களில் 130 குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர் என சிரிய மனித உரிமை வலைப்பின்னல் அமைப்பினால் ஆதாரத்துடன் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


