5 நாடுகளின் இறக்குமதி வரியை நீக்கியது சீனா!

Thursday, June 28th, 2018

இலங்கை உட்பட 5 நாடுகளுக்கு சீனா அரசு கால்நடை தீவனங்களுக்கு வரி ரத்து செய்துள்ளது.

இலங்கைஇ இந்தியாஇ வங்காளதேசம் லாவோஸ் தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோயாபீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களுக்கு வரியை ரத்து செய்துள்ளது சீன அரசு. இனி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து கூடுதலாக சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான உத்தரவை அந்த நாட்டின் நிதி அமைச்சகம் ஜூலை 1–ந் தேதி முதல் அமுல்ப்படுத்தியது. சோயாபீன்ஸ் மீது 3 சதவீதமும் சோயாபீன்ஸ் புண்ணாக்கு மீது 2 சதவீதமும் சீனா வரி விதித்து வருகிறது.

அமெரிக்காவிலிருந்து தான் சீனா அதிக அளவில் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்கிறது. எனினும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தற்போது கடுமையான வர்த்தகப்போர் நடைபெறுகிறது.

இதனால் அருகாமையிலுள்ள ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என சீனா அரசு கூறியுள்ளது.

Related posts: