ஒன்றிணையும் பிக்காசோவின் 3 ஓவியங்கள் !

Saturday, September 23rd, 2017

ஓவியர் பிகாசோவால் வரையப்பட்ட 3 ஓவியங்கள் முதன்முறையாக இணைக்கப்பட்டு, பாரிஸில் உள்ள பிகாசோ அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ, 1932 இல் வரைந்த ஓவியங்களான,  Nude, Green Leaves and Bust, Nude in a Black Armchair மற்றும் The Mirror ஆகிய மூன்று ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.

இவை மூன்றும் அவரது காதலியைப் பிரதிபலிக்கும் வகையில் வரையப்பட்டவை. இந்த மூன்று ஓவியங்களும் இதுவரை ஒரே நேரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டதில்லை.

முதன்முறையாக பாரிஸில் உள்ள பிகாசோ அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.இது பற்றிய அறிவிப்பை லண்டனில் உள்ள புகழ்பெற்ற நவீன அருங்காட்சியகமான ”டேட் மாடர்ன்” அறிவித்துள்ளது.

அதன்படி, பிகாசோவின் இந்த மூன்று ஓவியங்களும் வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை பாரிஸில் உள்ள பிகாசோ அருங்காட்சியகத்தில் சேர்த்து வைக்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் 8 முதல் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை லண்டன் டேட் மாடர்ன் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: