போலிஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்: துருக்கியில் 29 பேர் பலி!

Sunday, December 11th, 2016

துருக்கியின் இஸ்தான்புல் நகரின் மத்திய பகுதியில் நடந்த இரு குண்டு வெடிப்புகளில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோரில் பெரும்பாலானோர் போலிஸ் அதிகாரிகள் என தெரிவிக்கப்படகின்றது.

கால்பந்து ஆட்டம் முடிந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு, கால்பந்து மைதானத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலவர தடுப்பு போலிஸாரின் வாகனத்தை குறி வைத்து முதல் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

சில நிமிடங்களுக்கு பிறகு, அருகாமையில் இருந்த பூங்காவில், சந்தேகத்திற்குரிய தற்கொலை குண்டு தாக்குதல்தாரி தன்னை தானே வெடிக்கச் செய்துவிட்டார்.இரண்டாம் குண்டு வெடிப்பிற்கு பிறகு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த தாக்குதல் குறித்து, குர்திய பிரிவினைவாதிகள் மீது குற்றம் சுமத்தப்படுவதாக இஸ்தான்புல்லில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

16 மாதங்களுக்கு முன்பு தங்களது போர்நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததிலிருந்து, பாதுகாப்பு படையினரை குறி வைத்து அவர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இஸ்தான்புல்லில் கடைசியாக நடைபெற்ற கொடூர தாக்குதல், ஜூன் மாதம் நடத்தப்பட்ட விமான நிலைய குண்டு வெடிப்பு தாக்குதல் ஆகும்; அதற்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

_92921036__92920202_nigeriauyo976

Related posts: