5வது சிவில் தொடர்பாடல் இணைப்பு கருத்தரங்கு!
Friday, August 11th, 2017
5ஆவது தென் ஆசிய சிவில் தொடர்பாடல் இணைப்பு கருத்தரங்கு இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளின் அமெரிக்க தூதரகத்தின் தூதுவர் அதுல் கெஷாப் தலைமையில் ஆரம்பமானது.
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கடந்த திங்கட் கிழமை ஆரம்பமான இந்த கருத்தரங்கினை இராணுவ உளவியல் நடவடிக்கைகள் பணியகம் மற்றும் இலங்கையின் அமெரிக்க தூதரகம் இணைந்து ஏற்பாடுசெய்துள்ளது.
இக் கருத்தரங்கானது 10 நாட்களை கொண்டதாக எதிர்வரும் வெள்ளிக் கிழமை (18) நிறைவுபெறவுள்ளது. இந்தக் கருத்தரங்கில் பங்களாதேஷ் , கம்போடியா , இந்தியா , இந்தோனேசியா , மொங்கோலியா , நேபாளம் , பிலிப்பைன்ஸ் , மாலைதீவு மற்றும் இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய 30ற்கும் மேற்பட்ட இராணுவ சிவில் தொடர்பாடல் இணைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
Related posts:
கிர்கிஸ்தானின் சீனத் தூதரகத்தில் குண்டுவெடிப்பு!
4 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது ரஷ்யா!
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 மாணவிகள் விடுவிப்பு!
|
|
|


