3 நாடுகளுக்கு அமெரிக்க நிதியுதவி குறைப்பு!

கெளதமாலா, ஹோண்டுரஸ், எல்-சால்வடார் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அந்த 3 நாடுகளையும் சேர்ந்த அகதிகள்தான், வாகனங்கள் மூலம் அமெரிக்காவுக்குள் அதிக எண்ணிக்கையில் வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் டொனால் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
தங்கள் நாட்டு மக்கள், எல்லை கடந்து அமெரிக்காவுக்கும் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கெளதமாலா, ஹோண்டுரஸ், எல்-சால்வடார் ஆகிய 3 நாடுகளும் போதிய அளவில் மேற்கொள்ளவில்லை. எனவே, அந்த நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்படும் என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மீண்டும் புதின் அதிபராவார்!
வலுவான சாட்சி வேண்டும்: துருக்கி அரசிடம் அமெரிக்கா கோரிக்க!
வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலை - மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகள் ந...
|
|