25000 கோடிக்காக காலை இழந்த ஜெயலலிதா – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Saturday, May 6th, 2017

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, போயஸ் கார்டனில் பாதாள அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25,000 கோடி ரூபாய் யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெ மருத்துவமனையில் இருந்த போது அவரது  இரகசிய அறையில் இருந்த பணம் மற்றும் ஆபரண நகைகளை உடனடியாக நாடுகடத்த திட்டமிட்டார் சசிகலா. இதற்காக, தினகரனை வைத்து ஒரு திட்டத்தை அரங்கேற்றினார். இரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த அத்தனையும் கண்டெய்னர் லாரிகளின் மூலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடல்வழி மார்கமாக வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு முழுக்க முழுக்க மூளையாக செயல்பட்டது தினகரன் தானாம்.

இந்த பாதாள அறைகளின் லாக்கர் ஜெயலலிதாவின் கால் ரேகைகளுடன் பயோமெட்ரிக் முறையில் பூட்டப்பட்டிருந்தது. இதனை திறக்க வேண்டுமானால் ஜெயலலிதாவின் கால் ரேகைகள் தேவை. அதனால் தான் அவரது கால்களை எடுக்க சசிகலா உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணையின் போது தினகரன் இதுகுறித்து மழுப்பலாகவே பதில் அளித்து வந்ததால் தற்போது சசிகலாவை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்

Related posts: