24 பேர் சுட்டுக் கொலை : இந்தோனேசியாவில் பதற்றம்!
Wednesday, December 5th, 2018
இந்தோனேசியாவின் கிழக்கு பப்புவா பகுதியில் குறைந்த பட்சம் 24 கட்டுமான பணியாளர்கள் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தோனேசிய அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் சம்பவத்தில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
பப்புவா மாகாணத்தில் உள்ள டூகா பிராந்தியத்தின் பின்தங்கிய பகுதி ஒன்றில் பாதை மற்றும் பாலங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அந்த பிராந்தியத்தில் இயங்குகின்ற பிரிவினைவாத ஆயுததாரிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Related posts:
முதல்வர் பொறுப்பில் இருந்து விலக ஆனந்திபென் படேல் முடிவு!
மிரட்டலுக்கு பணியாத வடகொரியா!
பிரேசில் நாடாளுமன்றம் முற்றுகை - அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்!
|
|
|


