2020 க்குள் ராணுவத்தை நவீனமயமாக்க சீனா திட்டம்

சீனா தனது ராணுவத்தை முழுமையாக மறுசீரமைக்க போகிறது. 2020 அளவில் இணையப் போர் தொடுக்கும் வல்லமை கொண்ட ராணுவமாக உருவாக்குவோம் என கூறியுள்ளது.
இதற்கான 5 ஆண்டு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ள சீனாவின் மத்திய ராணுவ ஆணையம், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தை உலகின் முதல்தர ராணுவமாக மாற்றுவதே தமது இலக்கு.உலகின் மிகப்பெரிய இராணுவமாக சீன இராணுவம் உள்ளது. ஆனால், அதன் தாக்குதல் வல்லமையை அதிகரிக்க விரும்பும் சீன அரசாங்கம், படையினரின் எண்ணிக்கையை குறைத்து, நவீன ஆயுதங்களில் முதலீட்டை அதிகரிக்க விரும்புகிறது.
கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் தற்போது ஏற்பட்டுள்ள பிராந்திய முரண்பாடுகளையிட்டு தமது கடற்படை மற்றும் வான் படையின் பலத்தையும் சீனா அதிகரிக்க நினைக்கிறது.
திபெத் ராணுவ உத்தரவு அதிகார மையங்களை மக்கள் விடுதலை ராணுவ தரைபடையின் நேரடி கண்காணிப்பில் கொண்டுவர சீனா திட்டமிட்டு உள்ளது. என குளோபல் டைம்ஸ் தகவல் வெளியிட்டு உள்ளது
Related posts:
|
|