2014 முதல் இலங்கையில் இருந்து 2,835 மீனவர்கள் விடுதலை – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!
Tuesday, December 20th, 2022
2014ஆம் ஆண்டுமுதல் இதுவரை 2,835 இந்திய மீனவர்கள் இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் பேசிய ஜெய்சங்கர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் விடுதலைக்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய ஜெய்சங்கர், “தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி கவனம் செலுத்தியுள்ளார். இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பிரதமர் பலமுறை பேசியிருக்கிறார்” என்றார்.
மேலும், இலங்கையில் கைதான மீனவர்கள் விடுவிக்கப்பட்டால், அது சென்னையில் யாரோ கடிதம் எழுதுவதால் அல்ல, டெல்லியில் உள்ள ஒருவர் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்வதால் தான் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மலை ஏறும் வீரர் இருவர் 16 ஆண்டுகளின் பின் சடலங்களாக மீட்பு
நைகரில் 50 மில்லியன் டொலரில் அமெரிக்க விமானத் தளம்!
இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் - முதல்கட்டமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பிணைய கைதிகள் விடுதலை!
|
|
|


