20 மிதக்கும் அணு உலைகளை அமைக்க சீனா திட்டம்!
Wednesday, February 15th, 2017
தென்சீனக் கடலில் உள்ள சில தீவுகள் மற்றும் சீன அரசு அமைத்து வரும் செயற்கைத் தீவுகள் ஆகியவற்றின் மின்சாரத் தேவைகளுக்காக, கடலில் சுமார் 20 மிதக்கும் அணு உலைகள் அமைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக, சீன பாதுகாப்பு அமைச்சக அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின், இணை இயக்குநர் வாங் யேய்ரன், கூறுகையில் ‘இயற்கைச் சீற்றங்களில், மிதக்கும் அணு உலைகள் சிறிய அளவிலான பாதிப்பை மட்டுமே சந்திக்கும்.
ஏதேனும், அவசரமான சூழ்நிலை ஏற்பட்டால் கூட அணு உலைகளை எளிதாக கையாளலாம். பராமரிப்பு செய்வதும் எளிது. தென் சீனக் கடலில் 23 அணு உலைகள் படிப்படியாக அமைக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். ஏற்கனவே, தென் சீனக் கடற்பகுதி சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வரும் நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை மேற்கண்ட நாடுகளிடையே மேலும் ஆத்திரத்தை மூட்டியுள்ளது. தென் சீனக் கடல் பகுதிக்கு அண்டை நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்வான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


