15 மாதங்களின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஸ் பயணம்!
Friday, March 26th, 2021
பங்களாதேஸ் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந்த பிரிவினையை இந்தியா முன் நின்று நடத்தியது. இதன் காரணமாக இந்தியா- வங்கதேசம் இடையே நல்ல நட்புறவு நீடித்து வருகிறது.
பங்களாதேஸ் சுதந்திரம் பெற்று இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அதை தேசிய தினமாக் கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மோடிக்கு பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்று இன்று காலை பங்களாதேஸ}க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கொரோனா காரணமாக கடந்த 15 மாதங்களாக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளாதிருந்த நிலையில் 15 மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக பங்களாதேஸீக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
புங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் அங்கு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இன்றும், நாளையும் 2 நாட்கள் பங்களாதேஸில்; இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts: