13 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!

Tuesday, June 28th, 2016

மாலைதீவில் முதல்முறையாக ஜனநாயக ரீதியில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அதிபர்  முகமது நஷீத்துக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதி செய்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல்லா சயீத் நேற்று தீர்ப்பு அளித்துள்ளார்.

இராணுவத்தினரின் புரட்சியால், 2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பதவி இழந்த பின்னர், பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில், அவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதை எதிர்த்து, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், 13 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல்லா சயீத் நேற்று தீர்ப்பு அளித்தார். தண்டனை பெற்ற முகமது நஷீத், தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

Related posts: