39 சடலங்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

இங்கிலாந்தின் எசெக்ஸ் பிராந்தியத்தில் நேற்று 39 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதன் பின்னணியில் செயற்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழு குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
அந்தநாட்டின் குற்றவியல் விசாரணை பிரிவு இதனைத் தெரிவித்துள்ளார்.கொள்கலன் பாரவூர்தி ஒன்றில் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டன.
பல்கேரியாவில் இருந்து ஏதிலிகளாக பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கொள்கலன் பாரவூர்தியை செலுத்திய வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் போர்ட்டாடவுன் பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. அதேநேரம் அவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் சீனர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|