புகையிரத நிலையத்தில் குண்டுவெடிப்பு: 24 பேர் காயம்!
Friday, July 8th, 2016
தாய்வானில் தலைநகர் தைபேயில் புகையிரதமொன்றில் குண்டு வெடித்ததில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தைபே அருகே ஜின்பிய்டு என்ற மெட்ரே புகையிரத நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.
குறித்த தாக்குதல் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை தீய நோக்கத்துடன் யாரோ நிகழ்த்தி இருக்கலாம் என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டின் பிரதமரான லின் சுவான் கூறியுள்ளார். சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் புகையிரத பெட்டிகள் தீப்பிடித்து சேதமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.



Related posts:
ஐரோப்பாவில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியின் போது தாக்குதல் நடக்கலாம் - அமெரிக்கா!
அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளிக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்- தம்பிதுரை அறிவிப்பு!
அப்பா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் - மைக்கல் ஜாக்சனின் மகள் முறைப்பாடு!
|
|
|


