வடகொரியா தொடர்பில் அமெரிக்காவின் புதிய நிலைப்பாடு!
Tuesday, December 17th, 2019
வடகொரியாவின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, வட கொரியா கடந்த வாரம் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து முக்கிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டதாக அறிவித்திருந்தது.
இதனையடுத்து, மீண்டும் இரண்டு நாடுகளுக்கு இடையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேச்சுவார்தையைத் தொடரும்படி வட கொரியாவை மீண்டும் அழைத்துள்ளது அமெரிக்கா. வடகொரியாவுக்கான அமெரிக்க பிரதிநிதி ஸ்டீஃபன் பீகன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த காலத்தை போல் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் அமைதியை ஏற்படுத்தும் வகையில் குறித்த பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
"ரடொவான் கரடிச்சுக்கு 40 ஆண்டுகள் சிறை"
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எகிப்தில் 12 படையினர் பலி!
தன்னை தானே செல்பி எடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1 - இஸ்ரோ அறிவிப்பு!
|
|
|


