தென் சீனக்கடல் சர்ச்சை: டிரம்ப் நிர்வாகத்துடன் மோத தயாராகின்றது சீனா!

Friday, January 13th, 2017

தென் சீன கடல் தீவு ஒன்றில் கட்டுமாண பணிகளை மேற்கொள்வதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை சீனா நிராகரித்ததை தொடர்ந்து அமெரிக்காவுடன் ஒரு சாத்தியக்கூறான மோதல் போக்கிற்கு சீனா செல்வதுபோல் தோன்றுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் அடுத்த வெளியுறவுத்துறை செயலராக டொனால்ட் டிரம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரெக்ஸ் டில்லர்சன், சீனா மேற்கொண்டுவரும் கட்டுமானப் பணிகளை நிறுத்த ஒரு தெளிவான சமிக்ஞையை அமெரிக்கா அனுப்ப வேண்டும் என்றும், ஏற்கனவே சீனா கட்டியுள்ள தீவுகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் ஒருவர், அந்த பகுதிகளில் இயங்க சீனாவுக்கு உரிமை இருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்து அமைய உள்ள அமெரிக்க நிர்வாகமானது தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக கடினமான போக்கை கடைபிடிக்கும் என்பதை டில்லர்சனின் கருத்துக்கள் கோடிகாட்டுகின்றன.

_93540340_gettyimages-631482474

Related posts: