லெகிமா சூறாவளி – சீனாவில் 13 பேர் பலி!
Sunday, August 11th, 2019
சீனாவின் செஜியாங் மாகாணத்தை லெகிமா என்ற சூறாவளி புயல் தாக்கியுள்ளது. நேற்று நள்ளிரவு 1.45 மணியளவில் லெகிமா சீனாவில் நிலைக் கொண்டுள்ள லெகிமா சூறாவளி காரணமாக இதுவரை 13 பேர் பலியாகினர்.
சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு காரணமக பலர் சிக்குண்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்சரிவில் சிக்குண்டவர்களில் இதுவரை 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. சூறாவளி காரணமாக மரங்கள் முறிந்துள்ளதுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் சில பகுதிகளில் மணித்தியாலயத்திற்கு 187 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
வடகொரிய தலைவருக்கு உணவு சமைத்தவர் மாயமான விவகாரம் : வெளிச்சத்துக்கு வந்த உண்மை!
டிஜிட்டல் பிறப்பத்தாட்சி பத்திரத்தில் நீக்கப்படுகின்றது முக்கிய பகுதி - பதிவாளர்கள் நாயகம் எம்.சீ. ...
வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக மங்களேஸ்வரன் நியமனம்!
|
|
|


