மண்டை ஓடுகளை இலங்கையிடம் கையளிக்கும் பிரித்தானியா!
Saturday, November 23rd, 2019
இலங்கையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எடுத்துச்சென்ற இலங்கையின் ஒன்பது மனித மண்டையோடுகளை பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகம் மீண்டும் இன்று கையளிக்கின்றது.
இது தொடர்பான நிகழ்வு பிரித்தானிய எடின்பரோ பல்கலைக்கழக நூலக மண்டபத்தில் நடைபெறுகிறது. இதன்போது குறித்த மண்டையோடுகளை கையேற்பதற்காக இலங்கையின் வேடுவ இனத்தலைவர் வன்னிய ஊறுவரிகே பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
இதன்போது அவர் வேடுவ இனத்தின் முழங்கால் வரையிலான சாரம் அணிந்து பாரம்பரிய கோடரியுடன் பிரசன்னமாவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த ஒன்பது மண்டையோடுகளையும் இலங்கையில் காட்சிப்படுத்தவுள்ளதாக வேடுவ இனத்தலைவர் தெரிவித்துள்ளார். இந்த இறப்புக்கள் தமது வேடுவ சமூகத்துக்கு முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் இரண்டாவது தர பல்கலைக்கழகமாக விளங்கும் எடின்பரோ பல்கலைக்கழகம் தமது நூதனசாலையில் சுமார் 12000 மரபுரீதியான எச்சங்களை பாதுகாத்து வைத்துள்ளது. ஏற்கனவே இந்தப் பல்கலைக்கழகம் அவுஸ்திரேலியாவின் வேடுவ இனத்துக்கு அவர்களுடைய மூதாதையர்களின் மண்டையோடுகளை 2008ஆம் ஆண்டு மீண்டும் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


