ஒரு நாளுக்கு மேல் நாயைக் கட்டினால் சிறை – பங்களாதேஷ் அரசு!

Saturday, February 16th, 2019

பங்களாதேஷில் ஒரு நாளுக்கு மேல் நாயைக் கட்டிப்போட்டால் 6 மாதங்களுக்கு சிறைத் தண்டனை அல்லது குற்றப் பணத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்காளதேஷில் 1920 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட விலங்குகள் நலச் சட்டம் விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல், சாவடித்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்குச் சிறைத்தண்டனை அல்லது குற்றப்பணம் விதிப்பதற்கு வழிவகை செய்தது. இந்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டம் ஒன்றைப் பங்களாதேஷ் அரசு உருவாக்கி உள்ளது.

இதன்படி முறையான காரணங்கள் இன்றி ஒரு நாள் அல்லது அதற்கு மேல் நாயைக் கட்டிப்போடுவது தண்டனைக்குரிய குற்றம். இதை மீறுவோருக்கு 6 மாதச் சிறை தண்டனை அல்லது குற்றப்பணம் அல்லது குற்றப்பணத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: