பேருந்து விபத்து: கவுதமாலாவில் 20 பேர் பலி!
Sunday, December 22nd, 2019
கவுதமாலா நாட்டில் பயணிகள் பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கவுதமாலா சிட்டியில் இருந்து கிழக்கே 150 கி.மீ. தொலைவில் கவுலான் நகராட்சி பகுதியில் சென்றபோது, பேரூந்தின் பின்புறம் லாரி ஒன்று வேகமாக மோதி விபத்து ஏற்படுத்தியது.
இந்த கோர விபத்தில் 20 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Related posts:
மீண்டும் நியூஸிலாந்தில் புவிநடுக்கம்!
வடகொரியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!
நேபாளத்தில் இடம்பெற்ற விபத்தில் 17 போ் பலி - பலரது உடல்நிலை கவலைக்கிடம்!
|
|
|


