பரவிவரும் வைரஸ்: சுகாதார அமைச்சின் அறிவிப்பு!
Saturday, January 18th, 2020
சீனாவில் பரவிவரும் அடையாளம் காணப்படாத வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அவதான நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் உனான் மாகாணத்தில் பரவரும் அடையாளம் காணப்படாத ஒருவகை வைரஸ் பரவல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த வைரஸ் கடந்த காலங்களில் சீனா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் பரவிய டுசார்ஸ்டு என்ற வைரசை ஒத்தது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வைரஸ் தாக்கத்தால் சீனாவில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் வைத்தியாசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த எச்சரிக்கை குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவ்வாறான வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
நான் பதவி ஏற்கும் வரை விருந்து நிகழ்ச்சிகள்,இறுதிச்சடங்கு நடத்த கூடாது வட கொரிய அதிபர் உத்தரவு
அமெரிக்காவில் 50 பேரை பலியெடுத்த துப்பாக்கி சூடு: பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு!
ரஷ்யாவின் அடுத்த கட்ட நகர்வு குறித்து உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா!
|
|
|


