சவுதி அரேபியாவுக்கு செல்லும் அமெரிக்க படைகள்!
Saturday, September 21st, 2019
சவுதி அரேபியாவுக்கு தமது நாட்டு இராணுவ படைகளை அனுப்பவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவே மேற்படி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மாக் எஸபர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்படவுள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கை தொடர்பில் இன்னும் முடிவு செய்யப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் சவுதி அரேபியாவின் இரண்டு முக்கிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலையடுத்து, சவுதி அரேபியாவுக்கு தமது நாட்டு இராணுவத்தினரை அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வீழ்ந்தது டபிக்!
அமெரிக்க ஏவுகணை போர் கப்பல் மீது தீவிரவாத தாக்குதலா?
பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக உயர்வு!
|
|
|


