அமெரிக்க ஏவுகணை போர் கப்பல் மீது தீவிரவாத தாக்குதலா?

Wednesday, August 23rd, 2017

அமெரிக்காவுக்கு சொந்தமான John S. McCain என்ற அதிநவீன ஏவுகணை போர்க்கப்பல் சிங்கப்பூர் கடலுக்கும் மலாக்கா தீவுக்கும் இடையே லிபிய நாட்டிற்கு சொந்தமான சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும், இது விபத்து அல்ல எனவும் மாறாக சைபர் அல்லது நாசகார தாக்குதலாக இருக்கலாம் என சந்தேககம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க கடற்படைத் தளபதி அட்மிரல் ஜான் ரிச்சர்ட்சன் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார்.

மோதல் இடையூறுகள், சைபர் ஊடுருவல்கள் அல்லது நாசவேலை ஆகியவற்றின் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித அறிகுறியும் இல்லை என அவர் கூறியுள்ளார்.எனினும், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போது குறித்த விடயங்கள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும் என அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இரண்டாவது ஆபத்தான விபத்தாக இது பார்க்கப்படுகின்றது.எனவே, ஒரு கடற்படைத் திட்டத்தை அறிவித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விபத்தின் போது 10 அமெரிக்க படை வீரர்கள் காணாமல் போயுள்ளதாகவும், நான்கு பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி Fitzgerald என்ற அமெரிக்க போர் கப்பல் ஒன்று பிலிப்பைன் கன்டெய்னர் கப்பல் ஒன்றுடன் ஜப்பான் கடற்பரப்பில் வைத்து மோதி விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: