சக்திவாய்ந்த ஏவுகணையை சோதித்தது வடகொரியா!
Friday, October 4th, 2019
நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்ற ஏவப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது என்பதை வடகொரியா உறுதிப்படுத்தியுள்ளது.
குறுந்தூர ஏவுகணைகளை கடந்த மே மாதம் முதல் தொடர்ச்சியாக வடகொரிய சோதித்து வருகிறது. நேற்றையதினம் இந்த ஆண்டு 11வது ஏவுகணையை வடகொரியா சோதித்திருந்தது.
இந்த ஏவுகணை ஜப்பானின் கடற்பரப்பில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வடகொரியாவின் இந்த செயற்பாட்டை அமெரிக்காவும் ஜப்பானும் கண்டித்துள்ளன.
இந்தநிலையில், வடகொரியாவின் செய்தி முகவரகமான கே.சி.என்.ஏ இந்த ஏவுகணை சோதனையை உறுதிப்படுத்தி படங்களையும் செய்தியையும் வெளியிட்டுள்ளது.
Related posts:
மத்திய பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரயிலில் குண்டுவெடிப்பு!
மாலி நாட்டில் கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு!
இரண்டு மாத காலப்பகுதி வீதி விபத்துக்களில் 450 க்கும் அதிகமானோர் பலி - பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்ப...
|
|
|


