கழிவுகளை கடலில் வெளியேற்ற திட்டம்?

Wednesday, September 11th, 2019


புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்த அசுத்தமான மற்றும் கதிரியக்க நீரை சேகரிக்கும் சேமிப்பு கிடங்கு நிரம்பி வருவதால், அந்த நீர் கடலுக்கு அனுப்பப்படலாம் என்று ஜப்பான் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரி அணுமின் நிலையமான புகுஷிமாவில் இருந்து வெளியேற்றப்படும், அசுத்தமான மற்றும் கதிரியக்க நீர் சேமித்து வைக்கப்படுகின்றது.

இந்நிலையில், அவை சேமிக்கும் கலன்கள் நிரம்பி வருவதால் அதை கடலுக்கு அனுப்பலாம் என்று சுற்றுசூழல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கதிரியக்க நீர் கடலுக்கு அனுப்பப்படுவதை ஜப்பானின் மீனவர் குழுக்கள் மிக தீவிரமாக எதிர்க்கின்றன.

அதேவேளையில் இது மிகவும் குறைந்த அளவு ஆபத்தைத்தான் விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும், அதன்தொடர்ச்சியாக சுனாமி பேரலைகளிலும் சிதைவடைந்த ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கப் பொருட்கள் நீரில் வெளியேறுவதை தடுப்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: