அமெரிக்க ஜனாதிதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை!
Wednesday, September 25th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்கு, அமரிக்க ஜனநாயக கட்சியினர் முயற்சிகளை எடுத்துள்ளனர்.
அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நான்சி பெலோசி இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கலுக்கு வெளிநாடு ஒன்றின் உதவியை டொனால்ட் ட்ரம்ப் கோரி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்ப், யுக்ரெயின் ஜனாதிபதி வொல்டிமிர் செலென்ஸ்கியை தொலைபேசியில் அழைத்து, இதுதொடர்பான உதவியை கோரி இருப்பதாக புலனாய்வு தகவல் வழங்கும் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்து வருகிறார்.
டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் பிரேரணைக்கு ஜனநாயக கட்சியில் ஆதரவு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் கூட, குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் அதனை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|
|


