அமெரிக்காவை அச்சுறுத்தும் மர்மநோய்! இதுவரை ஐவர் மரணம் !

Sunday, September 8th, 2019

அமெரிக்காவில் மர்ம நோய் தாக்கம் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பு காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல இளைஞர்கள் பாதிப்படைந்து கோமா நிலையில் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இ-சிகரெட் புகைத்த நூற்றுக்கணக்கானோர் இந்த நோயால் பாதிப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது நோய்க்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அமெரிக்காவின் கலிபோர்னியா, மின்னசோட்டா உள்ளிட்ட மாகாணங்களில் இந்த மர்ம நுரையீரல் நோய் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. நோயின் தாக்கம் குறித்து வைத்தியர்கள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நோயாளி ஒருவரை பரிசோதனை செய்யும் போது நிமோனியா தொற்று இல்லாத லிபோய்டு நிமோனியா இருப்பதாக தெரிய வந்தது. இது எண்ணெய்கள் அல்லது கொழுப்பு கொண்ட பொருட்கள் நுரையீரலுக்குள் நுழையும் போது ஏற்படலாம் என, நுரையீரல் வைத்திய நிபுணர் டேனியல் பாக்ஸ் தெரிவித்துள்ளார்.

நோய் தாக்கம் குறித்து ஆய்வுகூடங்களில் மேற்கொண்ட பரிசோதனையின் போது கஞ்சா குழாய்களில் அளவுக்கு அதிகமான விட்டமின்-இ எண்ணெய் படலங்கள் இருப்பது தெரிய வந்தது. விட்டமின்-இ சத்து வாய் வழியாக, சரும வழியாக எடுக்கக்கூடியது என்ற போதும் அதை உள்ளுக்குள் இழுக்கிறபோது அது பாதிப்பை விளைவிக்கும் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

Related posts: