அணு திட்டம் குறித்து இணக்கப்பாடு – ஈரானின்!
Wednesday, September 4th, 2019
ஈரான் மற்றும் பிரான்ஸ் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, ஈரானின் அணு திட்டம் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஈரானிய அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைன, முரண்பாட்டை ஏற்படுத்தியிருந்த பல முக்கிய விடயங்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்க பேச்சாளர் தெரிவித்திருதுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அணு திட்டத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில், ஈரானிய அணு ஒப்பந்தம் தொடர்பான விடயங்கள் ஸ்திரமற்ற நிலையை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் விண்ணில் பாய்ந்தது ஏவுகணை!
கட்டுப்பாடுகளுடன் சபரிமலை தரிசனத்திற்கு அனுமதி!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பனிப்புயல் உருவாகும் அபாயம்!
|
|
|


