ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – அமெரிக்காவில் 03 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் தலைநகர் ஹோனாலுலுவில் 2 பெண் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கி தீப்பற்றி எரிந்தது.
இந்த கோர விபத்தில் விமானி உட்பட 03 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இதில் 02 பெண் சுற்றுலா பயணிகளில் ஒருவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
Related posts:
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரின் மகன் ஆப்கானிலிருந்து மீட்பு!
சோமாலியாவில் இடம்பெற்ற பாரிய தாக்குதல்களில் பலர் பலி!
உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சி – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்- - யாழ். ...
|
|