ஹவுஸ் மலையில் பனிச்சரிவு – மூவர் பலி !
Saturday, April 20th, 2019
கனடாவின் ஹவுஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 தொழிற்சார் மலையேறிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மலையில் அளவீட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த 3 மலையேறிகள், உரிய நேரத்தில் தங்குமிடத்துக்கு திரும்பாத காரணத்தால், அவர்களை அதிகாரிகள் குழு ஒன்று தேடி சென்றது.
அங்கு பனிச்சரிவு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் காணப்பட்ட நிலையில், அவர்கள் அதில் சிக்கி மரணித்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மலைப்பகுதியில் நிலவும் அபாயகரமான சூழ்நிலை காரணமாக, அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
600 முறை அத்துமீறிய பாகிஸ்தான் – இந்தியா!
அமெரிக்க முதல் பெண்மணி உக்ரைனின் முதல் பெண்மணியுடன் சந்திப்பு!
இண்டிகோவுடனான ஏர்பஸ் ஒப்பந்தத்தை பாராட்டிய பிரித்தானிய பிரதமர்!
|
|
|


