ஹவிஜா மாநிலம் முழுமையாக மீட்பு!
Friday, October 6th, 2017
தற்போது சிரியாவின் எல்லைப் பகுதி மாத்திரமே ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுபாட்டிற்குள் காணப்படுவதாக ஈராக்கின் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஈராக்கின் பாதுகாப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 98 நகரங்களை உள்ளிடக்கிய Hawija மாநிலம் நேற்யை தினம் முழுமையாக அரச படையினாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த பகுதியை மீட்கும் இராணுவ நடவடிக்கையின் போது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 196 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.2014 ஆம் ஆண்டு முதல் Hawija மாநிலம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மன்னிப்பு கேட்ட சூர்யா!
பாரிய தீ விபத்து - 7 பேர் உயிரிழப்பு!
பைடன் உட்பட 12 அமெரிக்க உயரதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழையத் தடை!
|
|
|


