ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவுதி அரசாங்கம்!

புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், ‘புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சான்றளிக்காதவர்களுக்கு கட்டாயத் தடுப்பூசி போடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சவுதியில் உள்ளவர்கள் மட்டுமே ஹஜ் சென்று வரும் நிலையில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பது குறித்து அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.
‘தடுப்பூசி என்பது எதிர்வரும் ஹஜ் புனித பயண அனுமதி பெறுவதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும்’ என சவுதி அரச பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு வலுவான நிலையில்!
ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்: இரத்தம் வழிந்த நிலையில் மெஸ்ஸி !
உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது!
|
|