ஸ்லோவேனிய இராணுவ தலைமை அதிகாரியாக பெண் நியமனம்!

ஸ்லோவேனியா (Slovenia), தனது நாட்டு இராணுவத்தின் தலைமை அதிகாரியாக பெண் ஒருவரை நியமித்துள்ளது.
இராணுவத் தலைமை அதிகாரியாக பெண் ஒருவரை நியமித்த நேட்டோவின் முதலாவது நாடாக ஸ்லோவேனியா பதிவாகியுள்ளது.
55 வயதான முன்னாள் இராணுவத் தளபதி அலேங்கா எர்மேன்ஸ், யூகோஸ்லாவியாவிலிருந்து ஸ்லோவேனியா சுதந்திரம் பெற்ற காலமான 1991ஆம் ஆண்டில், தனது இராணுவப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இவர் தற்போது இராணுவத்தின் பிரதித் தலைவராகக் கடமையாற்றி வருகின்றார்.
இந்தநிலையில் அலேங்கா எர்மேன்ஸ், இராணுவத்தின் செயற்றிறனை மேம்படுத்துவார் என நம்பிக்கை வைத்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி போரூட் பஹோர் (Borut Pahor) தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆப்கானில் 30 சிவிலியன்கள் ஐ.எஸ் குழுவினரால் கடத்திக் கொலை!
இரு கப்பல்கள் விபத்து: 32 பேர் மாயம்!
அல்ஜீரியா ஜனாதிபதி இராஜினாமா!
|
|