இஸ்ரேலுக்கு ஆதரவான தீர்மானத்தால் – கடும் கண்டனங்களை பெற்றுக்கொண்ட அமெரிக்கா!

Saturday, June 16th, 2018

பலஸ்தீனத்தின் தலைநகராக இருந்த ஜெருசலேமில் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தை அண்மையில் திறந்தது அமெரிக்கா. இதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.

காசா எல்லையில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு இஸ்ரேல் காரணமல்ல. மாறாக ஹமாஸ் அமைப்பே காரணம் என்று குறிப்பிட்டு ஐ.நா.பொதுச் சபையில் இஸ்ரேலுக்கு ஆதரவான தீர்மானத்தை அமெரிக்கா நேற்றுக் கொண்டுவந்திருந்த நிலையில் இந்த தீர்மானத்தை எதிர்த்து உலக நாடுகள் பலவும் வாக்களித்துள்ளன.

பலஸ்தீனத்தின் தலைநகராக இருந்த ஜெருசலேமில் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தை அண்மையில் திறந்தது அமெரிக்கா. இதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன. யூதர்களும், பலஸ்தீனர்களும் செறிந்து வாழும் பகுதிகளான காசா, மேற்குக் கரை, ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் பலஸ்தீனர்கள்.

காசாவில் இஸ்ரேலியச் சிப்பாய்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 120 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்த விடயம் குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நேற்றுக் கூடியது. இஸ்ரேல் மீது தவறில்லை. ஹமாஸ் அமைப்பே பலஸ்தீனர்கள் கொல்லப்படக் காரணம் என்று அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. எனினும் இந்தத் தீர்மானம் படுதோல்வியிலேயே முடிவுகண்டது.தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 8 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. 120 நாடுகள் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

Related posts: