ஆளில்லா விமானம் மூலம் அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

Thursday, March 16th, 2017

தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனுக்கு விஜயம் மேற்கொண்டு இது குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

அதன்படி, வெள்ளை மாளிகையின் அனுமதியின்றி மத்திய புலனாய்வு துறை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தும் வகையில் கொள்ளையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இராணுவ தலைமையகமான பென்டகனுக்குக்கே அதிகாரம் இருந்தது.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா காலத்தில் இந்த உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. தனியொரு நாட்டுக்கான ஆளில்லா விமான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை விட,

உலக நாடுகள் அனைத்துக்குக்கும் சேர்த்ததாக ஒரு ஆளில்லா விமான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முற்பட்டதுடன், ஏனைய நாடுகளையும் தனியொரு கொள்கையை அமுல்படுத்தவிடாது ஒபாமா தடுத்தார்.

எனினும் தற்போது ட்ரம்ப் குறித்த கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி அமெரிக்காவுக்கான தனியொரு கொள்கையை கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுத்துவருகின்றார்.

இதேவேளை, அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களை பனிப்புயல் “ஸ்டெல்லா” தாக்கியுள்ளதன் காரணமாக சுமார் 7600 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த இரண்டு நாட்களாக பனிப்புயல் தாக்கி வருகின்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7,600 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.

கடுமையான பனிப்புயல் தாக்கியுள்ளதன் காரணமாக சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில், பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் சிறப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, “ஸ்டெல்லா” பனிப்புயல் மேலும் 24 மணி நேரம் தொடர வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன

Related posts: