கிம் யாங்-நம் விவகார எதிரொலி – மலேசியர்கள் வடகொரியாவை விட்டு வெளியேற தடை!

Tuesday, March 7th, 2017

வட கொரிய அதிபரின் சகோதரர், கிம் யாங்-நம், கொல்லப்பட்ட சம்பவம் குறித்து  அதிகரித்துவரும் ராஜிய சர்ச்சையில், வடகொரியாவில் தற்போது இருக்கும் எந்த ஒரு மலேசியரும், நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று தடை விதிக்கப்படுவதாக வட கொரியா அறிவித்துள்ளது.

”மலேசியாவில் நடந்த சம்பவத்திற்கு முறையாக தீர்வு காணப்படும் வரை” இந்தத் தடை அமலில் இருக்கும் என்று வடகொரிய அரச செய்தி நிறுவனமான, கே.சி.என்.ஏ கூறியிருக்கிறது.

வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் கடந்த மாதம் மலேசியாவில் நரம்பைப் பாதிக்கும் ரசாயனத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.வட கொரியா இந்தக் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளது.

Related posts: