ஸிம்பாவே முதற் பெண்மணியும் நீதிமன்றில்!
Wednesday, August 16th, 2017
தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதை அடுத்து, ஸிம்பாவேயின் முதற் பெண்மணி கிரேஸ் முகாபே, தென் ஆபிரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
முதற் பெண்மணி பொலிஸாரிடம் சரணடைந்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.ஹோட்டலொன்றில் 20 வயதான மொடல் அழகியொருவரை இவர் தாக்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேற்படி மொடல் அழகியின் முகத்தில் முதற் பெண்மணி தாக்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதல் காரணமாக தனது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் தெளிவாகத் தெரியவரவில்லை. இந்நிலையில், இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
ரஷ்யாவின் வான் படை தாக்குதலில் 66 பேர் உயிரிழப்பு!
சீன விமானப்படையின் போர்ப் பயிற்சி சர்ச்சைக்குரிய கடல் பகுதியில்!
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது!
|
|
|


