வேலையற்றோர் எண்ணிக்கை அமெரிக்காவில் வீழ்ச்சி!

அமெரிக்காவில் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அங்கு பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளமை குறித்து தொழில்வழங்குவோர் கவலைப்படவில்லை என்பதையே இது வெளிப்படுத்துவதாக உள்ளது.
கடந்த 1973ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசு உதவிகளுக்கு வேலையில்லாதோர் விண்ணப்பிப்பது முதல் முறையாக கடந்த வாரம் குறைந்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
அங்கு தொழிற்சந்தை ஓராண்டாக ஆரோக்கியமான நிலையில் உள்ளதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.
இருந்தபோதிலும் அமெரிக்காவின் மத்திய வங்கி சீராக தனது வட்டி வீதங்களை அதிகரிப்பது எனும் கொள்கையிலிருந்து விலகிச் செல்ல, வேலைவாய்ப்பு குறித்த இந்தத் தரவுகள் போதுமானதாக இருக்காது எனக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வீழ்ச்சியடைந்தது என்பதும் கவனிக்கத்தக்கது
Related posts:
மண் சரிவு – பெருவில் 15 பேர் பலி!
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - நால்வர் உயிரிழப்பு - 28 பேர் காயம்!
உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் - சர்வதேச நாணய நிதிய...
|
|